முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தனுஸ்கோடி,பாம்பன் கடல் பகுதியில் ஐந்தாவது நாளாக பலத்த சூறாவளி காற்று:

ஞாயிற்றுக்கிழமை, 10 ஜூன் 2018      ராமநாதபுரம்
Image Unavailable

   ராமேசுவரம்,- தனுஸ்கோடி மற்றும் பாம்பன் கடலோரப்பகுதியில் ஐந்தாவது நாளாக  பலத்த சூறாவளி காற்று வீசிவருவதால்  தனுஸ்கோடி பகுதிக்கு பக்தர்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டு நாட்டு படகு  மீனவர்கள் தென்கடலில் மீன்பிடிக்க செல்ல  மாவட்ட நிர்வாகம் தடைவிதித்துள்ளது.
 ராமேசுவரம் தீவு பகுதியான பாம்பன் முதல் தனுஸ்கோடி வரை தென் கடலில் கடந்த நான்கு நாட்களாக தொடர்ந்து பலத்த சூறாவளி காற்று வீசி வருகிறது.இந்நிலையில் இந்த காற்று ஐந்தாவது நாளான இன்றும் வீசி வருவதால் தனுஸ்கோடி பகுதிக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் கம்பிபாடு பகுதியோடு நிறுத்தப்படுகின்றனர்.மேலும் தனுஸ்கோடி பகுதியில் இரண்டு கடல் இணையும் பகுதியான  அர்ச்சல்முனை கடல் பகுதி்யை பார்வையிட  சுற்றுலா பயணிகள் செல்ல மாவட்ட காவல்துறை நிர்வாகம் அனுமதி மறுக்கப்பட்டு தடைவித்துள்ளனர்.இதனால் ராமேசுவரம் திருக்கோயிலுக்கு வருகைதரும் பக்தர்களும்,சுற்றுலா பயணிகளும் அர்ச்சல்முனைப்பகுதியை பார்வையிட முடியாமல் ஏமாற்றுத்துடன் செல்கின்றனர். அதுபோல பாம்பன் முதல் தனுஸ்கோடி கடல் பகுதியான தென் கடலில் மீன்பிடிக்க செல்லும்  நாட்டு படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவேண்டாம் என மீன்துறை நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.இதனால் 500க்கும் மேற்பட்ட நாட்டு படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல் கடந்த நான்கு நாட்களாக வாழ்வாதரத்தை இழந்து உள்ளனர்.இதனை தொடர்ந்து பாம்பன் பாலத்தில் அவ்வொப்போது 55 கீ.மீ வேகத்திற்கு மேல் காற்று வீசுவதால் ராமேசுவரத்திலிருந்து வெளியூர்களுக்கு புறப்பட்டு செல்லும் ரயில்கள் பாம்பன் ரயில்  பாலம் நுழைவு வாயிலும், அதுபோல மதுரை,சென்னை மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து ராமேசுவரத்திற்கு வருகைதரும் ரயில்கள் மண்டபம் பகுதியில் ரயில் பாலம் நுழைவு வாயிலில் நிறுத்தப்பட்டு காற்றின் வேகம் குறைந்த பிறகு பாலத்தில் ரயில்களை ரயில் நிர்வாகம் இயக்கப்பட்டு வருகிறது.மேலும் ராமேசுவரம் முதல் பாம்பன் பகுதியில் சாலைகளில் அைமந்துள்ள பழமையான மரங்கள் திடீரென முறிந்து சாலைகளிலும்,சாலைக்கு அருகாமையிலும் விழுவதால்  சாலையின் அருகாமையிலிருக்கும் மின் கம்பங்களை சேதப்படுத்துகின்றனர்.இதனால் போக்குவரத்தும் சில நேரங்கள்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து