முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

காப்பி பேஸ்ட் கையடக்க எந்திரம்

தொழில் நுட்ப யுகம் அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது என்றால் அது மிகையல்ல. முன்பு ஒரு ஆவணத்தை நகலெடுக்க வேண்டும் என்றால் மிகப் பெரிய போட்டோஸ்டெட் இயந்திரங்கள் தேவைப்பட்டன. தற்போது கம்பியூட்டர் யுகத்தில் ஸ்கேனர்கள் வந்துவிட்டன. தற்போது அவற்றையும் தூக்கி சாப்பிடும் வகையில், கையடக்க காப்பி பேஸ்ட் எந்திரம் வந்து விட்டது என்றால் ஆச்சரியம் தானே.. இந்த நமக்கு தேவையான எதன் மீதும் வைத்து தேவையான பரப்பில் ஷேவிங் ரேஷரை இழுப்பது போல ஒரு இழு. அவ்வளவுதான்  அப்படியே எழுத்தோ, படமோ காப்பி ஆகிவிடும். பின்னர் நமக்கு தேவையான காகித்த்தில் வைத்து மீண்டும் ஒரு இழு. அவ்வளவுதான் அப்படியே பிரிண்ட் ஆகிவிடும். கேட்கவே ஆச்சரியமாக உள்ளது அல்லவா..

தூங்கினால் சம்பளம்

தூங்குவதுதான் வேலை என்றால்?  கசக்குமா  அதுவும் அந்தப் பணியை சிறப்பாகச் செய்தால் ஆண்டிற்கு $20,000 வெள்ளியை ஈட்டலாம். பிரபல சீன உடல்நல ஊட்டச்சத்து நிறுவனமான ‘நாவ் பாய்ஜின்’ இந்த 'அரிய' வாய்ப்பை வழங்குகின்றது. சீன இணையவாசிகளால் ‘உலகின் மிக சொகுசான வேலை’ என்ற பாராட்டை இது பெற்றுள்ளது. இந்த வேலைக்குத் தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் நிறுவனத்தின் பொருட்களைச் சோதிக்கத் துணைபுரிவார்கள். ஊட்டச்சத்துப் பொருளை உட்கொள்வது, தூக்கத்தின் தரத்தில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதைச் சோதிக்க வேண்டும். பின்னர், அது குறித்த அறிக்கையை அவர்கள் சமர்ப்பிக்க வேண்டும். தூக்கமின்மையால் அவதியுறுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் தூக்கத்தைச் சோதிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது மருத்துவ உலகம்.

புதையல் புதிது

சீனாவின் வடகிழக்கு மாகாணமான லியானிங் மாகாணத்தில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுக்கு முந்தைய புராதனப்பொருட்களை அகழ்வாராய்ச்சியாளர்கள் கண்டெடுத்துள்ளனர். கிறிஸ்து பிறப்பதற்கு முன், சீன ஹன் மன்னராட்சியின் வெண்கல காலத்தினை சேர்ந்த பானைகள், பாத்திரங்கள், இரும்பு பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

ரயிலை தூக்கிச்செல்லும் விமானம் எதிர்காலத்தில் எதுவும் சாத்தியம்

பயண நேரம் மிச்சமாகும் ரயிலைத் தூக்கிச் செல்லும் விமானம். கேட்பதற்கு ஆச்சர்யமாகத் தோன்றும் இந்த யோசனை வருங்காலத்தில் உண்மையாகப் போகிறது. ஈ பி எஃப் எல் (EPFL) என்ற ஸ்விட்சர்லாந்து பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர்கள் இதற்கான மாதிரியை உருவாக்கியுள்ளனர். இதன் பெயர் க்ளிப் ஏர் (CLIP AIR), இதன்படி, ரயில்பாதையில் சென்று கொண்டிருக்கும் ரயில் பெட்டிகளை பறந்து செல்லும் விமானம், தூக்கிச் சென்று சேர்க்க வேண்டிய இடத்துக்குக் கொண்டு செல்லும்.  ஒரு நேரத்தில் 3 பெட்டிகளை இந்த விமானத்தால் கொண்டு செல்ல முடியும். பயணிகள், சரக்குகள், கச்சா எண்ணெய் போன்றவற்றை இந்த விமானங்கள் எடுத்துச் செல்லும். இந்த விமான மாதிரியின் மூலம் ரயில், தரை மற்றும் வான்வழிப் போக்குவரத்தை ஒருங்கிணைக்கும் முறை சாத்தியமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுபோன்ற விமானங்களுக்காக இப்போது ஏர்போர்ட் (Airport) இருப்பதைப் போன்று வருங்காலத்தில் ஸ்கை ஸ்டேஷன்ஸ் (Skystations) என்பவை அமைக்கப்படும்.

வேகம் அதிவேகம்

ஃபாரடே நிருவனத்தின் இந்த அதிவேக காருக்கு FF 91 என்று பெயரிடப்பட்டுள்ளது. இதில் சக்தி வாய்ந்த 1050 ஹார்ஸ்பவர் என்ற என்ஜின்கள் பொருத்தப்படவுள்ளது. இதனால், இந்த காரானது, 2.40 வினாடிகளில் 0-100கி.மீ. வேகத்தை தொட்டுவிடும். 375 மைல்களை அசத்தலாக இது கடக்க கூடியது. இந்த மாடல் கார்களில் முகம் மூலம் அடையாளம் காணும் (face recognition)ஆப் பொருத்தப்பட்டுள்ளது.

குளோனிங் மூலம் புதிய உயிரை உருவாக்கியவர்

இங்கிலாந்தைச் சேர்ந்த சர் ஜான் குர்டான். இவர் தான் முதன் முதலில் குளோனிங் மூலம் புதிதாக ஒரு உயிரை உருவாக்கியவர். விலங்கியல் துறை ஆராய்ச்சியாளரான இவர் 1962ம் ஆண்டில் Xenopus என்ற தவளையின் ஸ்டெம் செல்லில் இருந்து புதிதாக ஒரு தவளையை உருவாக்கினார். இந்த ஆராய்ச்சியின் அடிப்படையிலேயே பின்னர் டாலி என்ற ஆட்டுக் குட்டி ஸ்டெம் செல் மூலம் உருவாக்கப்பட்டது. குளோனிங் மூலம் உயிர்களை உருவாக்கும் தொழில்நுட்பத்தை உருவாக்கிய இவர் தான், உடலில் உள்ள எல்லா செல்களிலும் உள்ள ஜீன்களும் ஒரே மாதிரியானவை என்று நிரூபித்தார். எந்தவொரு செல்லை கொண்டு அந்த உயிரினத்தை குளோனிங் முறையில் திரும்ப உருவாக்கி விடலாம் என்ற அவரது ஆராய்ச்சியை கண்டு உலகமே திகைத்து நின்றது.  இதற்காக இவருக்கும் ஷின்யா யமனகாவுக்கும் சேர்த்து நோபல் பரிசு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 2 weeks ago