விண்வெளியில் சூரிய மண்டலத்துக்கு வெளியே தற்போது புதிதாக ஒரு கோள் கண்டிபிடிக்கப்பட்டுள்ளது. இப்புதிய கிரகத்தை ஜெர்மனியின் மாஸ் பிளாங்க் என்ற நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. அதற்கு ஜிஜே 1132பி என பெயரிடப்பட்டுள்ளது. இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட புதிய கிரகங்களில் வளிமண்டலம் எதுவும் இல்லை. ஆனால் இதில் பூமியில் இருப்பது போன்று வளிமண்டலம் உள்ளது. இக்கிரகம் பூமியை போன்று 1.4 மடங்கு பெரியதாக உள்ளது. இது பூமியில் இருந்து 39 வெளிச்ச ஆண்டுகள் தூரத்தில் சூரிய மண்டலத்துக்கு அப்பால் உள்ளது. இந்த கிரகத்தில் உயிரினங்கள் வாழ முடியுமா? என்பது குறித்த ஆய்வு நடைப்பெற்று வருகிறது.
சில சுவாரிஸ்யமான தகவல்கள்
சிவப்பு பாண்டா கரடிகள் கிழக்கு இமயமலை மற்றும் தென்மேற்கு சீனாவில் காணப்படுகின்றன. இனச்சேர்க்கை காலத்தைத் தவிர தனிமையில் வாழக்கூடியது. இது அழியும் அபாயத்தில் உள்ளது. கடந்த 50 ஆண்டுகளில் மட்டும் எண்ணிக்கையில் 40% குறைந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அதிகம் வேட்டையாடுதல் மற்றும் வாழ்விடங்கள் அழிந்து போகுதல் போன்ற காரணங்களால் தற்பொழுது காடுகளில் 10,000 க்கும் குறைவான ரெட் பாண்டா காணப்படுகிறது. சிவப்பு பாண்டாக்களால் சயனைடை கூட ஜீரணிக்க முடியும். இவைகள் 40 வெவ்வேறு வகையான மூங்கில்களை ஜீரணிக்க கூடிய ஜீரண மண்டலத்தை கொண்டது. இந்த மூங்கில்களில் ஏராளமான சயனைடு சேர்மங்கள் இருக்கும். சயனைடை செரிமானம் செய்யக்கூடிய குடல் நுண்ணுயிரிகளின் கலவை சிவப்பு பாண்டாக்களின் குடலில் உள்ளது. சிவப்பு பாண்டாக்கள் கடல் மட்டத்திலிருந்து 7,800 முதல் 12,000 அடி வரையிலான உயரமான இடங்களில் குளிர்ச்சியான அகன்ற இலைகள் மற்றும் ஊசியிலையுள்ள காடுகளுக்குள் வாழ்ந்துவந்தது தெரியவந்துள்ளது. இதையும் தாண்டி ஒரு சில சிவப்பு பாண்டாக்கள் கடல் மட்டத்திலிருந்து கிட்டத்தட்ட 14,400 அடி உயரத்தில் காடுகளில் வாழ்வதாகக் கண்டறியப்பட்டது
குழந்தைகளுக்கு உணர்வுப் பிரச்சனைகளை கையாள அவர்களுக்கு விளையாட்டுச் சிகிச்சை நல்ல பலன் அளிக்கிறது. இந்த சிகிச்சை மறைமுகமாக குழந்தைகளின் தேவைகளை புரிந்துகொள்வது. இதன் மூலம் குழந்தையின் உணர்வுகளை வெளிக்கொண்டு வரமுடியும். 3 வயது மற்றும் அதற்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு இந்த சிகிச்சையை பயன்படுத்தலாம்
எந்த உயிரினமாக இருந்தாலும் அதன் உடல் இயங்குவதற்கு மூளையும் இதயமும் மிகவும் அடிப்படையானவையாகும். இவற்றில் எது பாதிக்கப்பட்டாலும் உடல் இயங்க இயலாது. ஆனால் ஒரே ஒரு உயிரினம் மட்டும் தலை இல்லாமல் சுமார் 1 வாரம் காலம் வரை உயிர் வாழும் என்பது ஆச்சரியம் தானே. அது வேறெதுவும் இல்லை. நாம் நம் சமையலறைகளில் பார்க்கும் கரப்பான்கள் தான் அவை. இதற்கு காரணம், அவை சுவாசிப்பதற்கு வாயையோ, மூளையையோ சார்ந்திருக்கவில்லை. அதன் உடல் முழுவதும் உள்ள துளைகள் வாயிலாகவே சுவாசிக்கிறது. அதே நேரத்தில் வாய் இல்லாவிட்டால் கரப்பான் இறந்து விடும். ஏனெனில் உணவு, தண்ணீர் இல்லாமல் எந்த ஜீவனாலும் உயிர் வாழ முடியாது தானே.
பீர்க்கங்காயில் நார்ச்சத்து, ‘ஏ’, ‘பி’, ‘சி’ வைட்டமின்கள், தாது உப்புகள் போன்றவை அளவுடன் அமைந்திருப்பதால் நீரிழிவு நோயாளிகள் பயமின்றி சாப்பிடலாம்.சொறி, சிரங்கு, புண்கள் முதலியன குணமாகப் பீர்க்கன் கொடி இலைகளை அரைத்து, அந்த இடங்களில் வைத்துக் கட்டினால் குணமாகிவிடும். தோல் நோயாளிகள் இதை சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தமாகி நோய் விரைவாக குணமாகும்.
டிரான்சிஸ்டர்கள் எனப்படும் சிறிய கருவிகள் கண்டுபிடிப்பதற்கு முன்பு வரையிலும் கணிணியானது இயங்குவதற்கு பற்சக்கரங்கள், பிவோட்கள், நெம்புகோல்கள் உள்ளிட்டவை பயன்படுத்தப்பட்டன. இவற்றை இயக்குவற்கு என தனியாக ஆற்றலும் தேவைப்பட்டது. இந்த சூழலில் 1936 இல் விளாடிமிர் லுகியானோவ் என்பவர் நீரை பயன்படுத்தி சில கணித முறைகளுக்கு தீர்வு காணக் கூடிய கணினியை உருவாக்கினார். இவற்றை கட்டிடங்களில் ஏற்படும் விரிசலை கண்டறிவதற்காக பயன்படுத்தப்பட்டன. பின்னாட்களில் இது வழக்கொழிந்தது. தற்போது இந்த நீர் கணினி மாஸ்கோவில் உள்ள பாலிடெக்னிக் அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 month 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 month 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.2 months 1 week ago |
-
சபரிமலைக்கு வரும் ஐயப்ப பக்தர்களுக்கு ஆதார் கட்டாயம் : தேவஸ்தானம் அறிவிப்பு
09 Nov 2024சபரிமலை : சபரிமலை வரும் அனைத்து பக்தர்களுக்கும் ஆதார் அடையாள அட்டை கட்டாயமாக்கப்பட்டு உள்ளது என்று தேவஸ்தான தலைவர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.
-
தஞ்சை பெரிய கோவிலில் சதய விழா தொடங்கியது
09 Nov 2024தஞ்சாவூர், தஞ்சை பெரிய கோவிலில் மாமன்னன் ராஜராஜசோழனின் 1039-வது சதய விழா மங்கள இசையுடன் நேற்று தொடங்கியது.
-
தமிழகத்தில் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
09 Nov 2024சென்னை, தமிழகத்தில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
விருதுநகரில் பட்டாசு தொழிற்சாலையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரில் ஆய்வு: தொழிலாளர்களுடன் கலந்துரையாடினார்
09 Nov 2024விருதுநகர், முதல்வர் மு.க.ஸ்டாலின் விருதுநகர் மாவட்டத்தில், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ளார்.
-
வெம்பக்கோட்டை அகழாய்வில் தங்கத்தினால் ஆன மணி கண்டெடுப்பு: அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்
09 Nov 2024விருதுநகர் : வெம்பக்கோட்டையில் தற்போது 3ம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், தங்கத்தால் ஆன மணி கண்டெடுக்கப்பட்டுள்ளது.
-
மகராஷ்டிராவை காங்கிரசின் ஏ.டி.எம். ஆக மாற விடமாட்டோம்: பிரதமர் மோடி
09 Nov 2024அகோலா : எங்கு எல்லாம் காங்கிரஸ் ஆட்சி அமைகிறதோ, அந்த மாநிலங்கள் அக்கட்சியின் ராஜ வம்சத்தின் ஏ.டி.எம்.களாக மாறி விடுகின்றன என்று பிரதமர் மோடி குற்றஞ்சாட்டினார்.
-
குரூப்-2 தேர்வில் கூடுதலாக 213 காலி பணியிடங்கள் : டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு
09 Nov 2024சென்னை : குரூப்-2, 2 ஏ பணியிடங்களுக்கு 2327 பேரை தேர்வு செய்வதற்கு பதிலாக 2540 பேரை தேர்வு செய்ய டி.என்.பி.எஸ்.சி. முடிவு செய்துள்ளது.
-
ஜெலன்ஸ்கியுடன், எலான் மஸ்க்கை தொலைபேசியில் பேச வைத்த டிரம்ப்
09 Nov 2024வாஷிங்டன் : உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்கை அமெரிக்க அதிபராக பொறுப்பேற்கவுள்ள டொனால்ட் டிரம்ப் பேசவைத்தது விவாதப் பொருளாகியுள்ளது.
-
ரஜினியுடன் நடந்த உரையாடல் குறித்து டுவிட்டரில் பதிவிட்ட கவிஞர் வைரமுத்து
09 Nov 2024சென்னை : நடிகர் ரஜினிகாந்துடன் நடந்த உரையாடல் குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கவிஞர் வைரமுத்து பகிர்ந்துள்ளார்.
-
மலையாள நடிகர்கள் சங்க தலைவர் பொறுப்பை ஏற்க மோகன்லால் மறுப்பு
09 Nov 2024திருவனந்தபுரம், மலையாள நடிகர்கள் சங்க தலைவர் பொறுப்பை மீண்டும் ஏற்க நடிகர் மோகன்லால் மறுப்பு தெரிவித்து விட்டதாக கூறப்படுகிறது.
-
தமிழகம் முழுவதும் வரும் 23-ம் தேதி கிராம சபை கூட்டம் நடத்த உத்தரவு
09 Nov 2024சென்னை : தமிழகத்தில் நவம்பர் 1-ம் தேதி கிராம சபை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த இருந்த நிலையில், நிர்வாக காரணங்களுக்காக ஒத்திவைக்கப்பட்டது.
-
சென்னையில் மெத்தபெட்டமைன் போதைப்பொருளுடன் துணை நடிகை மீனா கைது
09 Nov 2024சென்னை, டெடி உள்ளிட்ட பல திரைப்படங்களில் துணை நடிகையாகவும், தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ள துணை நடிகை மீனா சென்னையில் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டார்.
-
டிரம்பை கொல்ல சதி: ஈரானின் துணை ராணுவ குழு உறுப்பினர் மீது அமெரிக்கா குற்றச்சாட்டு
09 Nov 2024வாஷிங்டன் : டொனால்டு டிரம்பை கொலை செய்ய திட்டமிட்டதாக கூறி, ஈரானின் துணை ராணுவ குழு உறுப்பினர் ஒருவர் மீது அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது.
-
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை ரூ.21 கோடியில் சீரமைக்க முடிவு
09 Nov 2024சென்னை : 1965-ல் 5,500 ஹெக்டேராக இருந்த பள்ளிக்கரணை சதுப்பு நிலம், 2013 கணக்கெடுப்பின்படி 600 ஹெக்டேராக சுருங்கி விட்ட நிலையில் அதை ரூ.21 கோடியில் சீரமைக்க வனத்துறை முட
-
மருத்துவமனைகள் தொடர்பான விளம்பரங்களை ஊடகங்களில் வெளியிட தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு
09 Nov 2024சென்னை, மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகள் ஊடகங்களில் விளம்பரம் செய்வதற்கு தடை விதிக்க சென்னை ஐகோர்ட் மறுப்பு தெரிவித்து உத்தரவிட்டுள்ளது.
-
புகழ்பெற்றவர்கள் கட்சி தொடங்கினாலும் வி.சி.க.வுக்கு போட்டியாளராக முடியாது: திண்டிவனத்தில் திருமாவளவன் பேச்சு
09 Nov 2024விழுப்புரம், எவ்வளவு பெரிய புகழ்பெற்றவர்கள் புதிய கட்சி தொடங்கினாலும் விடுதலைச்சிறுத்தைகள் கட்சிக்கு போட்டியாளராக ஆக முடியாது என திண்டிவனத்தில் விசிக தலைவர் தொல்.திரும
-
அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் மாணவர்களுக்கான உதவி மையம் அமைக்கப்படும்: அமைச்சர் கோவி.செழியன் அறிவிப்பு
09 Nov 2024சென்னை, உயர்கல்வி தொடர்பான தகவல்களை வழங்க தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் உதவி மையம் அமைக்கப்படும் என்று அமைச்சர் கோவி.செழியன் தெரிவ
-
மெல்போர்னில் சபாநாயகர் அப்பாவுக்கு உற்சாக வரவேற்பு
09 Nov 2024மெல்போர்ன், மெல்போர்ன் நகரில் வசிக்கும் தமிழர்களின் சார்பில் பேரவைத் தலைவர் அப்பாவுக்கு வரவேற்பு நிகழ்ச்சி அளிக்கப்பட்டது.
-
எதிர்க்கட்சிகள் கூறும் குறைகளுக்கான விடையை 2026 தேர்தலில் மக்கள் தெரிவிப்பார்கள்: அமைச்சர் சேகர்பாபு
09 Nov 2024சென்னை, ஆட்சிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் குறைகளை சொல்லத்தான் செய்வார்கள்.
-
இந்திய டி20 கிரிக்கெட் வரலாற்றில் ரோகித்தின் சாதனையை சமன் செய்த சஞ்சு சாம்சன்
09 Nov 2024டர்பன் : தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் ரோகித் சர்மாவின் மாபெரும் சாதனையை சஞ்சு சாம்சன் சமன் செய்துள்ளார்.
-
காலிஸ்தான் ஆதரவாளர்கள் சீக்கிய பிரதிநிதிகள் அல்ல : கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பேச்சு
09 Nov 2024ஒட்டாவா : காலிஸ்தான் ஆதரவாளர்கள் சீக்கிய பிரதிநிதிகள் அல்ல என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்
-
பெண்களுக்கு மாதம் ரூ.2,500 உள்ளிட்ட 7 வாக்குறுதிகள்: ஜார்க்கண்ட் பிரச்சாரத்தில் ராகுல் உறுதி
09 Nov 2024பக்மாரா, ஜார்க்கண்ட்டில் இண்டியா கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கும் போது பெண்களுக்கான கவுரவத் தொகை ரூ.2,500 உள்ளிட்ட 7 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்று ராகுல் காந்தி
-
ராகுல் காந்தி காட்டும் அரசியல் சாசன புத்தகம் போலியானது: மத்திய அமைச்சர் அமித் ஷா கண்டனம்
09 Nov 2024பாலமு (ஜார்க்கண்ட்), தேர்தல் பிரச்சாரங்களின்போது ராகுல் காந்தி காட்டும் அரசியல் சாசன புத்தகம் போலியானது. அதன் உள்ளே எதுவுமே இல்லை என பா.ஜ.க.
-
இஸ்ரேல் வான்வழி தாக்குதல்: லெபனானில் 12 பேர் பலி
09 Nov 2024பெய்ரூட், கிழக்கு மற்றும் தெற்கு லெபனானில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில் 12 பேர் உயிரிழந்தனர்.
-
பாகிஸ்தானில் குவெட்டா ரயில் நிலையத்தில் தற்கொலைப்படை தாக்குதல்: 24 பேர் பலி
09 Nov 2024இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் குவெட்டா ரயில் நிலையத்தில் நடந்த தற்கொலைப் படை தாக்குதலில் 24 பேர் கொல்லப்பட்டனர். 46 பேர் காயமடைந்துள்ளனர்.