முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

கோவிட் மரணத்தை காட்டிலும் சுற்றுசூழல் மாசால் இறந்தவர்கள் அதிகம்

கோவிட் பெருந்தொற்று உலகம் முழுவதும் 59 லட்சம் பேர் கடந்தாண்டில் இறந்தனர். ஆனால் அதை காட்டிலும் அதிகமானோர் சுற்றுச்சூழல் மாசால் உயிரிழப்பதாக ஐநா எச்சரித்துள்ளது. சுற்றுச்சூழல் மாசு காரணமாக ஒவ்வொரு ஆண்டும் சுமார் 90 லட்சம் சிசுக்கள் குறைபிரசவத்தில் இறந்து போவதாக தெரியவந்துள்ளது. தற்போது இந்த விவகாரம் பூதாகரமெடுத்து வருவதாக ஐநா அலறுகிறது. நீரில் பாதிப்பு, காற்று பாதிப்பு, ரசாயன உரங்கள், பிளாஸ்டிக் பொருள்கள் மற்றும் அது தொடர்பான ரசாயனங்கள் என சுற்றுச்சூழலுக்கான அச்சுறுத்தல் நீண்ட சங்கிலி தொடர் போல நீண்டு செல்வதாகவும் ஐநா தெரிவித்துள்ளது. இது குறித்து உலக நாடுகள் விரைவில் நடவடிக்கை எடுக்க தவறினால் விளைவுகள் விபரீதமாகும் என்றும் எச்சரித்துள்ளது.

ஆரோக்கியத்தை பெற

இதயம் ஆரோக்கியமாக இருந்தால்தான், உடல் முழுவதும் இரத்த ஓட்டம் சீராக இருக்கும். இதய ஆரோக்கியத்தை அதிகரிக்க, நட்ஸ்கள் மட்டுமின்றி, விதைகளும் உதவும். ஆளி விதைகள், பூசணி விதைகள்,  எள்ளு விதைகள், வெந்தயம், சியா இவைகள் இதயத்தின் ஆரோக்கியத்தைச் சீராக்கும் 5 முக்கிய விதை உணவுகள். மனித உடலில் மூளைக்கு போதிய ஆக்ஸிஜன் கிடைக்காதபோது, மூளை சோம்பேறித்தனப்பட்டு கொட்டாவியைத் தருகிறது. எனவே, மூளையின் செல்கள் அழியாதிருக்க, பைட்டோ கெமிக்கல் உள்ள உணவுகள் தேவை. இத்துடன் மூளை பலவீனம், குழப்பம், நோய்த்தாக்குதல், அல்சீமெர்ஸ் என்ற ஞாபக மறதிநோய் முதலியன ஏற்படாமல் இருக்க, விட்டமின் ஏ, ஈ மற்றும் பி காப்ளக்ஸ் உள்ள உணவுகளும் தேவை.

அதிசய தம்பதிகள்

கொலம்பியா, மெடிலின் என்ற பகுதியைச் சேர்ந்த தம்பதிகளான மரியா கார்சியா மற்றும் மிகுல் ரெஸ்ட்ரீபோ இருவரும் கடந்த 22 வருடங்களுக்கு முன்னர், போதைப் பழக்கத்திற்கு அடிமையாகியிருந்தனர். பிளாட்பாரங்களில் தங்கியிருக்கும் போது ஒருவருக்கொருவர் ஆறுதலாக இருந்து வந்ததால், சேர்ந்து வாழ முடிவெடுத்து,  பயனில்லாத பாதாளச் சாக்கடையில் தங்களுக்கான இல்லத்தை உருவாக்கி குடியேறினர். பாதாளச் சாக்கடையில் 22 வருடங்களாக வசிக்கும் இவர்கள், தங்களுக்கு துணையாக ஒரு நாயையும் வளர்த்து வருகிறார்கள். இந்த இல்லத்தில் மின்சார வசதியைப் பெற்று, டி.வி உள்ளிட்ட சாதனங்களையும் பயன்படுத்தி வருவதுதான் ஆச்சரியம்.

பெண் குழந்தை பிறந்தால் பீஸ் வாங்காத அபூர்வ டாக்டர்

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள ஒரு கூலித் தொழிலாளி தனது மனைவியை பிரசவத்துக்காக அங்குள்ள மருத்துவமனையில் அனுமதித்திருந்தார். சிசேரியன் மூலம் அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. தன்னிடம் கைவசம் இருக்கும் குடிசை வீட்டையும் விற்றுத்தான் மருத்துவமனை கட்டணத்தை கட்ட வேண்டியிருக்கும் என கவலையுடன் டாக்டரை அணுகியுள்ளார். ஆனால் டாக்டரோ எங்கள் மருத்துவமனையில் தேவதைகள் பிறந்தால் ஃபீஸ் வாங்குவதில்லை என கூறி அந்த தொழிலாளியிடம் அவரது பெண் குழந்தையை மகிழ்ச்சியுடன் கொடுத்துள்ளார். இவ்வாறு அவர் 1000க்கும் மேற்பட்ட பிரசவங்களை இலவசமாக செய்து கொடுத்துள்ளார்.  டாக்டர் கணேஷ் ராக் என்பவர்தான் இந்த பெருமைக்கு சொந்தக்காரர். மல்யுத்த வீரனாக மாற விரும்பிய அவரை அவரது அம்மா தான் மருத்துவராக ஆக்கி, பெண் குழந்தை பிறந்தால் ஃபீஸ் வாங்கக் கூடாது என்று கேட்டுக் கொண்டாராம். அப்போது முதல் பெண் குழந்தை பிரசவத்துக்கு அவர் கட்டணம் வசூலிப்பதில்லை. அவரை உள்ளூர் மக்கள் நாயகனாக போற்றுகின்றனர். உண்மை தானே..

முட்டை ஆரோக்கியம்

முட்டையின் மஞ்சள் கரு உண்மையில் ஆரோக்கியமான ஒன்று. அதை நாம் கொலஸ்ட்ரால், கொழுப்பு என்ற ஒற்றை காரணம் காட்டி தவிர்த்து வருகிறோம். ஆனால், முட்டையின் மஞ்சள் கருவில் நிறைய வைட்டமின் மற்றும் மினரல் சத்துக்கள் இருக்கின்றன. வைட்டமின்: எ, டி, கே, ஈ. மற்றும் பி மினரல்ஸ்: கால்சியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், ஜின்க்.

ப்ளூ வேல் கேம்

ப்ளூ வேல் சார்ந்த தேடல்களின் கூகுள் டிரென்ட்ஸ் பட்டியலில் இந்தியா தொடர்ந்து 3-வது இடத்தில் உள்ளதாம். இந்நிலையில் உலக அளவில் 30 நகரங்களில் கூகுள் டிரென்ட்ஸ் பட்டியலில் புளூ வேல் இடம்பெற்றுள்ளது. இந்த கேமினை கடந்த 12 மாதங்களில் கூகுளில் அதிக முறை தேடப்பட்ட நகரங்களில் கொல்கத்தா முதலிடம் பிடித்துள்ளதாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 4 weeks ago