முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

இந்தியப் பெருங்கடல், 16 நாடுகள் என 12, 000 கிமீ வியக்க வைக்கும் பயணம்

குயில் இனத்தைச் சேர்ந்த பறவை ஒன்று தென் ஆப்ரிக்காவில் இருந்து மங்கோலியாவிற்கு சுமார் 12 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திற்கும் அதிகமாக பயணித்ததை செயற்கைக்கோள் மூலம் கண்டறிந்துள்ளனர் விஞ்ஞானிகள். குளிர்காலங்களில் சாம்பியாவில் வாழும் இந்த பறவை 16 நாடுகளை தாண்டிப் பறந்துள்ளது. வழியில் பெருங்கடல், அதிக காற்று என அனைத்தையும் எதிர்கொண்டுள்ளது. இது ஒரு வியக்கத்தக்கப் பயணம் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். ஓனன் என்று அழைக்கப்படும் பறவை மட்டுமே இந்த நெடுந்தூர பயணத்தை மேற்கொண்டுள்ளது. இந்த ஓனன் பறவை ஓய்வேதும் எடுக்காமல் இந்தியப் பெருங்கடலை மணிக்கு 60 கிமீட்டர் வேகத்தில் கடந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் கென்யா, செளதி அரேபியா மற்றும் வங்கதேசம் என உலகின் ஒவ்வொரு பகுதியில் இருக்கும் நாடுகளையும் தனது பயணத்தில் கடந்துள்ளது.

களிமண் அணை

கரிகாலன் காவிரியை வென்றவன், இமயத்தில் கொடி நட்டுவந்தவன் என்னும் பெருமைக்குரியவன். சோழ வம்சத்தின் ஆட்சிப் பகுதிகளை விரிவுபடுத்தியவன் இப்படி பல்வேறு சிறப்புக்களை கொண்டவன் கரிகாலன். அடிக்கடி வெள்ளத்தால் மக்கள் அவதிப்படுவதால் அதற்கு ஒரு வழி கண்டுபிடித்தனர் சோழர்கள். காவிரி ஆற்றின் மீது பெரிய பாறைகளைக் கொண்டுவந்து போட்டனர். அந்தப் பாறைகளும் நீர் அரிப்பின் காரணமாக கொஞ்சம் கொஞ்சமாக மண்ணுக்குள் சென்றன. பாறைகளுக்கு மேல் வேறொரு பாறையை வைத்து நடுவே தண்ணீரில் கரையாத ஒருவித ஒட்டும் களி மண்ணைப் புதிய பாறைகளில் பூசி இரண்டயும் ஒட்டிக்கொள்ளும் விதமாகச் செய்தனர். இதுவே இவ்வணையினைக் கட்டப் பயன்படுத்தப்பட்ட தொழில்நுட்பமாகும். பல வல்லுநர்கள் வந்து சோதித்து பார்த்தும் இன்னும் இதற்கு விடை கண்டுபிடிக்க முடியவில்லை.

சூரியனை பார்க்கும் அதிசய முதியவர்

உத்தரபிரதே மாநிலத்தைச் சேர்ந்தவர் 70 வயதான எம்எஸ் வர்மா. இவர் ஓய்வு பெற்ற அரசு அதிகாரி. எந்த வயதிலும் சாதிக்கலாம் என்பதற்கு இவர் ஓர் உதாரணம். இடைவிடாமல, கண்களை கொஞ்சம் கூட இமைக்காமல் சூரியனை 1 மணி நேரம் பார்க்கும் திறமை படைத்தவர். நமக்கெல்லாம் வெளிச்சத்தை சிறிது நேரம் உற்று பார்த்தாலே கண்கள் இருட்டி விடும். மனுசன் சூரியனை விடாமல் பார்ப்பாராம். இதற்காக சுமார் 25 ஆண்டுகள் பயிற்சி எடுத்துள்ளார். ஆன்மிக குரு ஒருவரின் மீதான தாக்கம் காரணமாக அவர் கண்களை இதற்கு பழக்கிக் கொண்டதாக தெரிகிறது. சாதனையை கூலாக முடித்துக் கொண்டு ஹாயாக ஃபோட்டோவுக்கு போஸ் கொடுக்கிறார். 

எர்த் என எப்படி பெயர் வந்தது

நம் முன்னோர் பூமி தட்டை என்று மேலை நாட்டினர் கொண்ட கருத்தைக் கொண்டிருக்கவில்லை. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பேயே இதை அண்டம் என்ற சொல்லால் அழைத்தனர். அண்டம் அல்லது முட்டை நீள் உருண்டை வடிவம் கொண்டது  பூமி என்று இதன் பொருளாகும். தமிழில் மட்டும் பூமிக்கு 62 சொற்கள் உள்ளன என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.  பூமிக்கு ஆங்கிலத்தில் வழங்கப்படும் "எர்த்" என்ற பெயர் ஆயிரம் ஆண்டு பழமையானது. இதில் சுவாரசியம் என்னவென்றால் பூமியைத் தவிர்த்த மற்ற அனைத்து கோள்களுக்கும் கிரேக்க, ரோமானிய ஆண், பெண் கடவுள்களின் பெயர்கள் சூட்டப்பட்டன. அதேநேரம் பூமிக்கு "எர்த்" என்ற பழைய ஆங்கிலா சாக்ஸன் மொழியால் ஆன பெயர் சூட்டப்பட்டது. நிலப்பகுதி என்ற எளிமையான அர்த்தம் கொண்ட சொல் அது. பழைய ஆங்கிலத்தில் எர்தா (ertha ) என்றும், ஜெர்மனில் எர்டே (erde) என்றும் குறிக்கப்படுகிறது.

வாட்டர் ப்ரூப் ஸ்பீக்கர்

வாட்டர் ஃபுரூப் ஸ்பீக்கரான லாஜிடெக் வொண்டர் பூம் எனும் ப்ளூடூத் ஸ்பீக்கர் மழையில் நனைந்த படியும், நீச்சல் குளத்திலும் பயன்படுத்த முடியும். மேலும் 360 டிகிரி சரவுண்ட்டுக்கு ஒலியை கொடுக்கும். இதை ஒருமுறை சார்ஜ் செய்தால் 10 மணிநேரத்திற்கு கேட்கலாம். 5 அடி உயரத்தில் இருந்து விழுந்தாலும், எந்தவித சேதமும் ஏற்படாதாம். ஒரே நேரத்தில் இரண்டு ஆடியோ டிவைஸ்களில் கனெக்ட் செய்ய முடியும்

உலகில் அமைதியான இடம் எது தெரியுமா?

உலகிலேயே மிகவும் அமைதியான இடம் எங்குள்ளது என்ற தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள். அது இயற்கையான இடமோ, நகரோ அல்ல. மாறாக அது ஒர் அலுவலகம். அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் உள்ள ரெட்மாண்ட் என்ற இடத்தில் அமைந்திருக்கும் மைக்ரோஷாப்ட் தலைமையகத்தில் உள்ள பரிசோதனை கூடம்தான் அந்த இடம். இந்த இடத்தில் உள்ள சத்தத்தின் அளவு வெறும் 20 டெசிபலுக்கும் கீழே உள்ள இடம். இதன் மூலம் முந்தைய சாதனைகளை இந்த இடம் முறியடித்துள்ளது

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 days ago