முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

புதிய கண்ணாடிகள்

சீனாவில் கண் அசைவுகளை எலெக்ட்ரிக் சிக்னல்களாக மாற்றும் ட்ரைபோஎலெக்ட்ரிக் நானோ ஜெனரேட்டர் என்ற தொழில்நுட்பத்தை கொண்டு கண் தசைகளின் அசைவுகளை கட்டளைகளாக மாற்றும் புதிய கண்ணாடிகளை வடிவமைத்துள்ளனர். கண் கண்ணாடிகளின் பிரேமில் இந்த சென்சார்கள் இணைக்கப்பட்டு, கண் தசைகளின் அசைவுகளை முழுமையாகக் கண்காணிக்கும். அசைவுகளைக் கட்டளைகளாக மாற்றி கம்ப்யூட்டருடன் இணைக்கப்பட்ட சிறிய அளவிலான எலெக்ட்ரானிக் கருவிக்கு கடத்தும். இதன்மூலம் கண் அசைவின் கட்டளைகளை ஏற்று கம்ப்யூட்டர்கள் ஆன் செய்வதோ, ஆஃப் செய்வதையோ நிகழ்த்தலாம். இதன் மூலம் கீ போர்டு இல்லாமலேயே கண் அசைவினாலேயே டைப் செய்ய முடியுமாம்.

உலகம் எங்கும்...

தமிழர்கள் அதிகம் வசிக்கும் நாடுகளான, அமெரிக்காவில் சுமார் 2 லட்சம் பேரும்,  ஆஸ்திரேலியாவில் சுமார் 1 லட்சம் பேரும், இலங்கையில் 60 லட்சம் பேரும், அமீரகத்தில் 2 லட்சம் பேர், சிங்கப்பூரில் 2 லட்சம் பேரும், இங்கிலாந்தில் 3 லட்சம் பேர், பிஜி தீவில் 50 ஆயிரம் பேர், மொரிசியஸ் தீவில் 50 ஆயிரம் பேர், மலேசியா, கனடா, தென்னாப்பிரிக்காவில், ரீயூனியன் தீவு  என பல நாடுகளில் நம்மவர்கள் அதிகம் வசிக்கின்றனராம்.

தேனின் மகிமை

உடல் மெலிந்தவர்கள் தேனில் பேரீச்சம்பழத்தை ஊற வைத்து தினமும் சாப்பிட்டு வந்தால் சதை பிடிக்கும். அல்சர் நோய் குணமாக தினமும் சாப்பாட்டிற்கு முன் இரண்டு கரண்டி தேனைச் சாப்பிட்டு வர வேண்டும். அரை அவுன்ஸ் தேனுடன் அரை அவுன்ஸ் இஞ்சிச்சாறு கலந்து காலை நேரங்களில் தொடர்ந்து சாப்பிட்டு வர ரத்த சுத்தியும், ரத்த விருத்தியும் ஏற்படும்.

ஓராண்டு இடைவெளியில் இரட்டை குழந்தைகள் பிறந்தது எப்படி

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் ஒரு பெணணுக்கு ஓராண்டு இடைவெளியில் இரட்டை குழந்தைகள் பிறந்த அதிசய சம்பவம் உலகம் முழுவதையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ஓராண்டு இடைவெளியில் பிறந்த இரட்டை குழந்தைகளா.. அது எப்படி.. கலிபோர்னியாவை சேர்ந்தவர் பாத்திமா மாட்ரிகல் என்ற இளம்பெண். இவர் கருவுற்றிருந்தார். பிரசவ வலி எடுக்கவே டிசம்பர் 31 இல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இரவு 11.45க்கு இவருக்கு குழந்தை பிறந்தது. இந்நிலையில் மீண்டும் அவருக்கு பிரசவ வலி எடுக்கவே அவரை சோதித்ததில் அவர் இரட்டை குழந்தைகளை கருவுற்றிருந்தது தெரியவந்தது. இதையடுத்து சுமார் 15 நிமிடங்களுக்கு பிறகு மற்றொரு குழந்தையை பிரசவிததார். இதன் மூலம் அந்த குழந்தை 2022 இல் ஜனவரியில் பிறந்தது. இதனால் இரண்டு குழந்தைகளுக்கும் வெவ்வேறு தேதி, மற்றும் வருடங்களில் பிறந்த தினம் அமைந்தது. இந்த செய்தி உலகம் முழுவதும் வேகமாக பரவியது.

வித்தியாசமான தீர்ப்பு

பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில் குழந்தையைக் கடித்த நாய் ஒன்றுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அந்த மாகாணத்தின் அசிஸ்ட்டென்ட் கமிஷனர் ராஜா சலீம், இந்த மரண தண்டனையை விதித்துள்ளார். நாயின் உரிமையாளர், இந்த தண்டனையை எதிர்த்து எந்தக் கோர்ட்டுக்கும் போகத் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

மேகங்களின் எடை எவ்வளவு - கேட்டால் ஆச்சரியப்படுவீர்கள்

எப்போதாவது நீங்கள் வானத்தை பார்க்கும் போது "மேகங்களுக்கு எவ்வளவு எடை இருக்கும்?" என்று நினைத்து இருக்கிறீர்களா? பார்க்க பஞ்சு பொதி போல் காணப்பட்டாலும் மேகங்கள் எடை கொண்டவையாகும்.  சராசரியாக ஒரு மேகத்தின் எடை 1.1 மில்லியன் பவுணடுகள் ஆகும். அதாவது ஒரு மேகத்தின் எடை சராசரியாக 100 யானைகளின் எடைக்கு ஈடானதாகும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 days ago