முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருஞானசம்மந்தர் பாடல் கருத்துக்கு பொருத்தமானவர் முதல்வர்

புதன்கிழமை, 16 ஏப்ரல் 2014      ஆன்மிகம்
Image Unavailable


திருச்சி, ஏப்.17 - தமிழகத்தில் வரும் 24_ந் தேதி பாராளூமன்ற தேர்தல் வருகிறது. இந்த தேர்தலில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து மதுரை ஆதீனம் பல்வேறு இடங்களில் பிரசாரம் செய்து வருகிறார். இவர் திருச்சி மலைக்கோட்டை பகுதி சறுக்குபாறை அருகே நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது மதுரை ஆதீனம் பேசியதாவது,
இந்த நாட்டில் தீவீரவாதம் ஒழிய, விலைவாசி குறைய நதிகள் தேசியமயமாக்க ஜெயலலிதா பிரதமராக வேண்டும். இது காலத்தின் கட்டாயம். அருடைய ஜாதகத்தில் இருக்கிறது. கண்டிப்பாக தேர்தலுக்கு பிறகு ஜெயலலிதா பிரமராக வருவார்.
முன்பு இந்தியாவின் பிரதமராக வரக்கூடிய தகுதி காமராஜர், ஜி.கே.மூப்பனார் ஆகியோருக்கு இருந்தது. ஆனால் அவர்கள் முயற்சிக்கவில்லை. ஆனால் இப்போது அதற்கான வாய்ப்பு இருப்பதால் நாம் எல்லோரும் சேர்ந்து ஜெயலலிதாவை பிரதமராக்க வேண்டும். அதற்கு அதிமுகவுக்கு வாக்களித்து வெற்றிபெற செய்யவேண்டும்.
திருஞானசம்பந்தர் பாடல்களில் உள்ள கருத்துகளுக்கு பொருத்தமான அனைத்து தகுதிகளும் முதல்வர் ஜெயலலிதாவுக்குதான் மட்டுமே உள்ளது. கடவுள் வழிபாடு அவரை காத்து வருகிறது. அதிமுகவில் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், மாவட்ட செயலளர்கள், பகுதி செயலாளர்கள், தொண்டர்கள் செயல்பாடுகள் சரியில்லை என்றால் உடனடியாக அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கும் துணிச்சல் ஜெயலலிதாவுக்கு மட்டுமே உண்டு.
தமிழகத்தில் தற்பொழுது மின் உற்பத்தி நிலையங்களில் ஆங்காங்கே பழுது எற்படுவதன் காரணமாகதான் மின்வெட்டு ஏற்படுகிறது. 2014_ல் ஜெயலலிதா பிரதமரானதும் தமிழகத்தில் முழுமையான மின்சாரம் கிடைக்கும். முதல்வர் ஜெயலலிதா தற்பொழுது திருச்சி நாடாளுமன்ற அதிமுகவேட்பாளர் குமார் உருவத்தில் திருச்சியில் போட்டியிடுகிறார். எனவே அந்த குமாரை பல லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யவேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் அரசு தலைமை கொறடா மனோகரன், திருச்சி மேற்கு தொகுதி எம்.எல்.ஏ பரஞ்சோதி, துணைமேயர் ஆசிக் மீரா, கோட்டத்தலைவர்கள் சீனிவாசன், கவுன்சிலர்கள் கார்த்திகேயன், அய்யப்பன், சுதாகர், தமிழரசி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
=============
நரேந்திரமோடியை நல்லவர் என்று கூறிய கருணாநிதியை
தமிழகத்தை சார்ந்த முஸ்லீம் மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்
திருச்சியில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பரபரப்பு பேட்டி
திருச்சி, ஏப்.17_
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் திருச்சி சங்கம் ஹோட்டலில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது,
இந்துக்கள், முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், தாழ்த்தப்பட்ட மக்கள் ஆகிய மக்களுக்கு பாதுகாவலானாக மத்திய காங்கிரஸ் அரசு இருந்து வருகிறது. குறிப்பாக சிறுபான்மை மக்களுக்கு மத்திய அரசு பல்வேறு சலுகைகளை வழங்கியுள்ளது. அதே நேரத்தில் குறிப்பாக தமிழ்நாடு தார்ஹித் சமாத் திமுக ஆதரவு என்ற நிலையை எடுத்துள்ளது. தமிழகத்தில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளில் 36 தொகுதிகளை திமுகவிற்கு ஆதரவாகவும், தேனி, மயிலாடுதுறை, கன்னியாகுமரி ஆகிய 3 இடங்களில் காங்கிரசுக்கு ஆதரவாகவும், இருப்பதாக அறிவித்துள்ளார்கள். ஏன் 36 தொகுதிகளில் அவர்கள் ஆதரவு திமுகவிற்கு அளிக்கப்போவதாக கூறியிருப்பது எங்களுக்கு புரியவில்லை. கருணாநிதி மத்தியில் பாரதிய ஜனதா ஆட்சி இருந்தபோது ஆதரவு கொடுத்தவர்தான் என்பதை தமிழ்நாடு தாவ்ஹித் ஜமாத் மறந்து விடக்கூடாது.
கடந்த 10 நாட்களுக்கு முன்பு நரேந்திரமோடி நல்லவர் என்று கருணாநித கூறியிருந்தது அவரது நம்பகத்தன்மை இல்லாதது என்பதை இஸ்லாமிய மக்கள் புரிந்து செயல்படவேண்டும். கருணாநிதியை பொருத்தவரை மத்தியில் எந்த அரசு வருகிறதோ அந்த அரசிடம் திமுகவிற்கு பதவிகள் பெற துடிப்பவர் அவர். ஒருவேளை முதல்வர் ஜெயலலிதா பிரதமராக வந்தாலும் அவருடன் கருணாநிதி 3 மந்திரிகள் வேண்டுமென கேட்கத்தயங்கமாட்டார். எனவே காங்கிரசை தமிழக முஸ்லீம் ஆதரிக்க வேண்டும்.
நரேந்திரமோடியை நல்லவர், வல்லவர் என 20 நாட்களுக்கு முன்பு கூறிய கருணாநிதி இப்பொழுது நேர்மாறாக பாரதீய ஜனதாவை திட்டுகிறார். இதை தமிழக மக்கள் புரிந்துகொள்ளவேண்டும். தமிழக காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ஜி.கே.வாசன் மாயவரம் தொகுதியில் போட்டியிட்டு இருந்தால் வெற்றிபெற்றிருக்க முடியும். தமிழகத்தில் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக சுற்றுப்பயணம் செய்து காங்கிரசுக்கு ஆதரவு திரட்டுகிறார். அதேபோல ப.சிதம்பரம் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பே தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட இளைஞர்களுக்கு வழிவிட வேண்டும் என்று பேசினார். அவரும் தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்து காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி வருகிறார்.
தமிழகத்தில் உள்ள காங்கிரஸ் தலைவர்களை நான் மதிப்பதில்லை. கொஞ்ச நாளாகவே கருணாநிதி பிரச்சாரத்தில் என்ன பேசுகிறார் என்பது யாருக்கும் புரியவில்லை. மத்தியில் மதசார்பற்ற கட்சி ஆட்சிக்கு வந்தால் ஆதரிப்பேன் என்று கூறுகிறார். திடீர் என நன்றி மறந்தவர்கள் காங்கிரஸ்காரர்கள் என கூறுகிறார். இப்படி மாறிமாறி பேசுகிறார். தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி மக்களுடன் கூட்டணி வைத்திருக்கிறது. மற்ற கூட்டணி கட்சிகளை நீங்கள் பாருங்கள். கருணாநிதி கூட்டணியில் உலக தலித் நாயகன் திருமாவளவன் உள்ளிட்ட சில கட்சிகள் இருக்கிறது.
பாரதீய ஜனதா கூட்டணியை பாருங்கள் விஜயகாந்த், டாக்டர் ராமதாஸ் உள்ளிட்ட தலைவர்கள் இருக்கிறார்கள். இதில் தேர்தலுக்குமுன்பே மொட்டை போட்டவர் பொன்.ராதாகிருஷ்ணன். தேர்தல் முடிந்த பிறகு நடிகர் விஜயகாந்த மொட்டை போட்டுக்கொள்வார். எங்கள் கூட்டணி மக்களுடன் நல்லமுறையில் கூட்டணி வைத்திருக்கிறது. நல்ல உறவும் இருக்கிறது. நாங்கள் பிரச்சாரம் செய்யும்போது பல இடங்களில் தாழ்த்தப்பட்ட மக்கள் எங்களுக்கு நல்ல வரவேற்பு கொடுக்கிறார்கள் எனவே தமிழகத்தில் வரும் 2016 சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடிக்கும் சூழ்நிலை எழுந்துள்ளது.
108 ஆம்புலன்ஸ் திட்டத்தை தமிழகத்தில் கொண்டு வந்ததாக கருணாநிதி கூறுகிறார். அந்த வேனில் கருணாநிதி, மு.க.ஸ்டாலின் படத்தை போட்டுக்கொள்ள வேண்டியதுதானே.
ரஜினிகாந்தை நரேந்திரமோடி சந்தித்ததில் பெரிய விசயம் எதுவுமில்லை. மு.க.அழகிரி கூடத்தான் ரஜினிகாந்தை சந்தித்தார். ரஜினிகாந்தை தினமும் ஒரு சாதாரண நடிகை கூட சந்தித்து பேசுகிறார். அதற்காக தமிழகத்தில் மோடி அலை வீசுவதாக சொல்கிறார்கள். மோடி மஸ்தான் அலை கூட வீசவில்லை. நரேந்திரமோடிக்கே தேர்தலில் நாம் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை இல்லை. நரேந்திமோடி ஏன் 2 தொகுதிகளில் போட்டியிடவேண்டும். இவ்வாறு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நிருபர்களிடம் தெரிவித்தார். பேட்டியின்போது திருச்சி நாடாளுமன்ற காங்கிரஸ் வேட்பாளர் சாருபாலா தொண்டைமான், திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜெரோம் ஆரோக்கியராஜ், வில்ஸ் முத்துக்குமார் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்