முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குஜராத் மக்களை மிரட்டி மோடி ஓட்டு வாங்கி உள்ளார்: கார்த்திக்

புதன்கிழமை, 16 ஏப்ரல் 2014      சினிமா
Image Unavailable

 

நாகர்கோவில்:ஏப்-17 - கன்னியாகுமரியில் நடந்த சோனியா காந்தி பிரசார பொதுக் கூட்டத்தில் நடிகர் கார்த்திக் கலந்து கொண்டு பேசியதாவது:-
தற்போது நடைபெறும் பாராளுமன்ற தேர்தல் தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் நடக்கும் தேர்தல் அதாவது காங்கிரசுக்கும் பா.ஜனதாவுக்கும் நடக்கும் யுத்தம். தர்மம் காங்கிரஸ், அதர்மம் பா.ஜனதா. தற்போது நடைபெற உள்ள மாநில தேர்தல் அல்ல. தேசிய தேர்தல். நீங்கள் யாருக்கு ஓட்டு போடப்போகிறீர்கள் என்று தெளிவாக இருக்க வேண்டும். குழப்பத்தில் இருக்கும் மக்களை மீட்பது நமது கடமை. இந்தியா, இந்தியாவாக இருக்க வேண்டும். பாகிஸ்தான் போல் ஆகி விடக்கூடாது.நரேந்திரமோடியால்உலகத் தலைவர்களிடம் பேசமுடியாது. மற்றவர்கள் எழுதி கொடுப்பதை பேசி வருகிறார். அவர் நாட்டை சிதறடிக்க பார்க்கிறார். நமது ஒற்றுமையை சீர்குலைக்க பார்க்கிறார்.
நமது நாட்டின் வளர்ச்சிக்கு பிரதமர் மன்மோகன்சிங்,சோனியா காந்தி, ராகுல்காந்தி, நிதி அமைச்சர் சிதம்பரம் ஆகியோர் அரும்பாடுபட்டு வருகிறார்கள். தேசம் ஒன்றுபட்டு இருக்க வேண்டும், பொருளாதார வளர்ச்சிஅடைய வேண்டும் என்று பாடுபட்டு வருகிறார்கள். நாட்டை சுற்றி மிகப்பெரிய ஆபத்து உள்ளது. நரேந்திர மோடிக்கு நாட்டை ஆள தெரியாது. குஜராத் மக்களை மிரட்டிதான் அவர் ஓட்டு வாங்கி உள்ளார். யானைக்கு மதம் பிடித்தால் காடு தாங்காது. மதத்துக்கு மதம் பிடித்தால் நாடுதாங்காது. தேசத்தை பிரிக்கத்தான் நரேந்திர மோடிக்கு தெரியும்.இலங்கை அதிபருக்கும் நரேந்திர மோடிக்கும் எந்த வித்தியாசமும் கிடையாது. நரேந்திர மோடி தொடர்ந்து பொய் பேசி வருகிறார். இந்தியா ஜெயிக்க வேண்டுமானால் காங்கிரஸ் ஜெயிக்க வேண்டும். தோற்றால் நாமும் மக்களும் தோற்று விடுவோம். நாட்டை காப்பாற்றுவதற்காக காங்கிரசுக்கு ஓட்டு போடுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்