முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வரின் நடவடிக்கை வரவேற்கத்தக்கது: டி.ராஜேந்தர்

வெள்ளிக்கிழமை, 18 ஜூலை 2014      சினிமா
Image Unavailable

 

திருப்பரங்குன்றம், ஜூலை 19 - தமிழகத்தின் கலாச்சாரத்தை காக்க தமிழக முதல்வர் எடுத்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது என்று லட்சிய திமுக தலைவர் டி. ராஜேந்தர் கூறினார்.

சென்னையில் இருந்து தூத்துக்குடி மாவட்டத்தில் விழா ஒன்றில் கலந்து கொள்ள விமானம் மூலம் மதுரை வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, வேட்டி என்பது தமிழர்களின் பாரம்பரிய உடை. இதற்கு ஒரு தீர்க்கமான முடிவெடுத்து தமிழக சட்டப்பேரவையில் அறிவிப்பு செய்த தமிழக முதல்வரின் நடவடிக்கை வரவேற்கத்தக்கது. மத்திய ரயில்வே பட்ஜெட் ஏழை மக்களையும், சீசன் டிக்கெட் பயணிகளையும் பாதிக்கும். எனவே கட்டண உயர்வை குறைக்க வேண்டும். டீசல், பெட்ரோல் விலைகளை மத்திய அரசே நிர்ணயம் செய்ய வேண்டும். கடந்த தேர்தல்களில் லட்சிய திமுக பார்வையாளராக இருந்தது. நடக்கவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலில் முக்கிய பங்கு வகிக்கும். அதற்காக மாவட்டம் வாரியாக கட்சியை பலப்படுத்தும் பணியை செய்ய உள்ளோம் என்றார். மதுரை வந்த டி. ராஜேந்தருக்கு அக்கட்சியினர் சிறப்பான வரவேற்பளித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்