முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை உயர்நீதி மன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

செவ்வாய்க்கிழமை, 2 செப்டம்பர் 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை.செப்.3 - சென்னை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளருக்கு நேற்று காலை மர்ம தொலைபேசி வந்தது. உயர்நீதிமன்ற வளாகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக கூறிய அந்த மர்ம நபர் தொலைபேசி இணைப்பை துண்டித்து விட்டார்.

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து நேற்று வெடிகுண்டு நிபுணர்கள் நீதிபதிகள் அறை உள்பட அனைத்து இடங்களிலும் தீவிர சோதனை நடத்தினார்கள். இதே போல 108 சேவை பிரிவுக்கும் மர்ம தொலைபேசி வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து காவல் துறைக்கு புகார் செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து போலீசார் வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாயுடன் உயர்நீதிமன்ற வளாகத்திற்கு சென்றார்கள்.

தலைமை நீதிபதி அறை உள்பட அனைத்து அறைகளிலும் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை மேற்கொண்டார்கள். மோப்ப நாய்களும் ஒவ்வொரு அறையாக சென்று மோப்பம் பிடிக்க செய்யப்பட்டது.

இந்த வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து உயர்நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. நீதிமன்றத்திற்கு வருபவர்களிடம் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதனிடையே வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். அந்த மிரட்டல் போன் பாரிமுனையில் உள்ள மண்ணடியில் இருந்து வந்திருப்பதை போலீசார் கண்டறிந்தனர். மேலும் மர்ம தொலைபேசியில் பேசிய ஆசாமியை தேடி வருகிறார்கள்..

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்