முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுபாஷ் சந்திரபோசை கண்டுபிடிக்க மனு செய்தவருக்கு அபராதம்

செவ்வாய்க்கிழமை, 2 செப்டம்பர் 2014      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, செப்.03 - இந்தியாவின் விடுதலைக்காக இந்திய தேசியப்படை அமைத்து ஆயுதம் ஏந்தி போராடியவர் சுபாஷ் சந்திர போஸ். ஜெர்மனி, ஜப்பான் நாடுகளின் உதவி பெற்று பெரும் படையை திரட்டிய அவர் ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தார். அப்படிப்பட்ட அவர் 1945-ஆம் ஆண்டு இரண்டாம் உலகப் போர் நிறைவடைந்த நேரத்தில் திடீரென மாயமாகிப் போனார். சுபாஷ் சந்திரபோஸ் சென்ற விமானம் விபத்தில் சிக்கியதாகவும் அதில் அவர் மரணம் அடைந்து விட்டதாகவும் தகவல் வெளியானது. ஆனால் அவர் ஒரு நாட்டில் வயதானவராக வாழ்ந்து இறந்ததாகவும் கூறப்பட்டது. இதனால் அவர் என்ன ஆனார் என்பது இதுவரை வெளியில் வராத மர்மமாக உள்ளது.

சுபாஷ் சந்திரபோசை கண்டுபிடிக்கக் கோரிபல தடவை நாடெங்கும் கோர்ட்டுகளில் வழக்குகள் தொடரப்பட்டன. ஆனால் அந்த வழக்குகள் எல்லாம் தள்ளுபடி செய்யப்பட்டன. இந்த நிலையில் பொதுநல வழக்குகளில் வாதாடுவதில் புகழ்பெற்ற வக்கீல் எம்.எஸ்.சர்மா என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் ஒது பொதுநல மனு தாக்கல் செய்தார். அதில் அவர் சுபாஷ் சந்திரபோஸ் எங்கு சென்றார்? என்ன ஆனார் என்பதை கண்டுபிடித்து சொல்ல வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி லோதா, நீதிபதிகள் குரியன் ஜோசப், நர்மன் ஆகியோர் முன்னிலையில் நடந்தது. அப்போது மனு தாரரான எம்.எஸ்.சர்மாவே கோர்ட்டில் ஆஜராகி வாதாடினார். போசை கண்டுபிடிக்க ஹேபியஸ் கார்பஸ் மனுவை தாக்கல் செய்தது பற்றியும் அவர் நீதிபதிகளிடம் விளக்கிப் பேசினார். சர்மாவின் விளக்கத்தை பொதுமையாக கேட்ட நீதிபதிகள் பிறகு தீர்ப்பு கூறுகையில், இந்த மனு நம்பிக்கைக்கு உரியதோ, விசாரணைக்கு உரியதோ அல்ல. பல தடவை இந்த விவகாரத்தில் பதில் கூறப்பட்டு விட்டது. எனவே கோர்ட்டு நேரத்தை வீண் செய்ததற்காக சர்மாவுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது என்றார்.

நீதிபதிகளின் இந்த அதிரடி உத்தரவை கேட்டதும் வக்கீல் சர்மா அதிர்ச்சியடைந்த விட்டார். தெரியாமல் பொது நல வழக்கு மனு செய்து விட்டேன். என்னிடம் ரூ.1 லட்சம் இல்லை. அபராதத் தொகையை குறையுங்கள் என்று கேட்டுக் கொண்டார். இதையடுத்து அவருக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகை ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.50 ஆயிரமாக குறைக்கப்பட்டது. சமீபத்தில் தேவை இல்லாமல் பொதுநல வழக்கு தொடர்ந்ததற்காக சர்மாவுக்கு ஏற்கெனவே ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்