முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பூந்தமல்லி கோர்ட்டில் பாகிஸ்தான் உளவாளி ஆஜர்

செவ்வாய்க்கிழமை, 16 செப்டம்பர் 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, செப். 17 – சென்னை சாலி கிராமத்தில் இலங்கையைச் சேர்ந்த பாகிஸ்தான் உளவாளி அருண் செல்வராசனை தேசிய புலனாய்வு பிரிவு போலீசார் கடந்த 10–ந்தேதி கைது செய்தனர்.

கடந்த 5 ஆண்டுகளாக ‘‘ஐஸ்ஈவென்ட்’’ என்ற பெயரில் கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யும் நிறுவனத்தை நடத்தியபடி ஓசை இல்லாமல் உளவு பார்த்து வந்து உள்ளார்.

அவரிடம் இருந்து தமிழகத்தின் முக்கிய இடங்களின் படங்கள், பரங்கிமலை ராணுவ பயிற்சி மையம், சென்னை துறைமுகம் பற்றிய புகைப்படங்கள் கைப்பற்றப்பட்டன. அவரது செல்போனில் பதிவு செய்து வைத்திருந்த முக்கிய கூட்டாளிகளின் உரையாடல்களும் கைப்பற்றப்பட்டது.

மும்பை நகருக்குள் தீவிரவாதிகள் கடல் வழியாக நுழைந்து தாக்குதல் நடத்தியது போல தமிழகத்திலும் தாக்குதலில் ஈடுபட ஐ.எஸ்.ஐ. உளவு நிறுவனம் சதி திட்டம் தீட்டி இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து தமிழகம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளது.

கடந்த 2012–ம் ஆண்டு திருச்சியில் பாகிஸ்தான் உளவாளி தமீம் அன்சாரி கைது செய்யப்பட்டான். இதேபோல் கடந்த ஏப்ரல் மாதம் உளவாளி ஜாகீர் உசேன் சிக்கினான். அவனது கூட்டாளிகள் 4 பேரும் கள்ள நோட்டுகளுடன் பிடிபட்டனர். தற்போது உளவாளி அருண் செல்வராசன் சிக்கி உள்ளான்.

பிடிபட்ட அனைவருக்கும் இலங்கையில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் உதவி இருப்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து அருண் செல்வராசனை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்தனர்.

இந்த நிலையில் புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த அருண் செல்வராசனை நேற்று

காலை பூந்தமல்லியில் உள்ள சிறப்பு கோர்ட்டில் போலீசார் பலத்த பாதுகாப்புடன் ஆஜர்படுத்தினர்.

ஏற்கனவே 12–ந்தேதி அவரை காவலில் எடுத்து விசாரிக்க தேசிய புலனாய்வு முகமை போலீசார் கோர்ட்டில் மனு தாக்கல் செய்து இருந்தனர். வழக்கு விசாரணை நடந்து வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்