முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை: அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

திங்கட்கிழமை, 20 அக்டோபர் 2014      தமிழகம்
Image Unavailable

 

மதுரை, அக் 21 - நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் பெரியாறு, வைகை அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை துவங்கியிருப்பதால் தமிழகம் முழுவதும் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக பெரியாறு, வைகை அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் கனமழை பெய்து வருவதால் அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

கடந்த சனிக்கிழமை இரவு 8 மணி முதல் ஞாயிற்று கிழமை காலை 8 மணி வரை பதிவான மழை அளவு வருமாறு:

பெரியாறு 9.4 மி.மீ, தேக்கடி 32.2, கூடலூர் 12, சண்முகாநதி 16, உத்தமபாளையம் 23, வீரபாண்டி 20, வைகை அணை 17, மஞ்சளாறு 19, மருதாநதி 8, சோத்துப்பாறை 18, பேரணை 5.7, குப்பணாம்பட்டி 12, ஆண்டிபட்டி 7, மதுரை 21.6, மேட்டுப்பட்டி 9, கள்ளந்திரி 10, சிட்டம்பட்டி 13.6, இடையபட்டி 15, விரகனூர் 25.6, புலிப்பட்டி 7.2, மேலூர் 6.8, தனியாமங்கலம் 10 மி.மீ மழை பெய்துள்ளது. சனிக்கிழமை இரவு 8 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி வரை பெரியாறு அணைக்கு விநாடிக்கு 1,660 கனஅடி நீர் வரத்து இருந்தது. அணையில் இருந்து விநாடிக்கு 1,400 கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது. அணையில் 3.865 மில்லியன் கனஅடி நீர் தேங்கியிருந்தது. அணையின் நீர் மட்டம் 126.10 அடியாக இருந்தது. வைகை அணைக்கு விநாடிக்கு 1,779 கனஅடி நீர் வரத்து இருந்தது. அணையில் இருந்து விநாடிக்கு 1,660 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணையில் 1,285 மில்லியன் கன அடி நீர் தேங்கியிருந்தது. அணையி்ன் நீர் மட்டம் 43.81 அடியாக இருந்தது.

ஞாயிற்றுக்கிழமை காலை முதல் தொடர்ந்து பருவமழை பெய்து வருவதால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணைகளின் நீர் மட்டமும் உயர்ந்து வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்