முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு மானிய தொகை

திங்கட்கிழமை, 20 அக்டோபர் 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை: அக். 21 - ஒருங்கிணைந்த கைத்தறி குழும வளர்ச்சி திட்டத்தின்கீழ் விருதுநகர் கைத்தறி பெருங்குழுமம் செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்திற்கு மத்திய மற்றும் மாநில அரசால் ரூபாய் 87.68 கோடி நிதி ஒதுக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

திட்டத்தின் நோக்கம்

கைத்தறி நெசவாளர்களுக்கு தொழில்நுட்ப மேம்பாட்டை புகுத்தி நெசவில் பல உத்திகளை கையாண்டு நல்ல தரமான இரகங்களை உற்பத்தி செய்வதன் மூலம், கூலி உயர்வு நெசவாளிகளுக்கு கிடைக்கச் செய்து வாழ்வாதாரத்தை மேம்பாடு அடையச் செய்வதுதான் இத்திட்டத்தினுடைய பிரதான நோக்கமாகும்.

 

இத்திட்டத்தின் மூலம் விருதுநகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் சிவகங்கை ஆகிய 6 மாவட்டங்களைச் சார்ந்த சுமார் 30,000 கைத்தறி நெசவாளர்கள் பயன்பெற்று வருகின்றனர். விருதுநகர் கைத்தறி பெருங்குழுமத் திட்டத்தினை செயல்படுத்துவதற்கு மத்திய அரசு தொழில்நுட்ப மேம்பாட்டிற்காக பெடல் தறிகள் மற்றும் தறி உபகரணங்கள் அளித்து அதனை செயல்படுத்தும் முகமை நிறுவனமாக தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தினை (கோ-ஆப்டெக்ஸ்) நியமித்துள்ளது.

மேற்கண்டவாறு பெறப்பட்ட நிதி உதவியினைக் கொண்டு 3470 பெடல் தறிகள், 4859 ஜாக்கார்டு பெட்டிகள், 5275 ஊடை நூல் சுற்றும் இயந்திரம், 6180 அச்சு மற்றும் விழுதுகள், 9838 மின்கலத்துடன் கூடிய மின்விளக்குகள் மற்றும் இதர தறி உபகரணங்கள் கொள்முதல் செய்யப்பட்டு பயனாளிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் மூலம் பெடல் தறி மற்றும் இதர உபகரணங்கள் வழங்கியதன் விளைவாக உற்பத்தி அதிகரித்து அதனால் நெசவாளர்களின் தினக்கூலி மூன்று மடங்காக உயர்ந்துள்ளது. விருதுநகர் கைத்தறி பெருங்குழுமத்தின்கீழ் உட்கட்டமைப்பு வசதிகள் செய்து தர, தமிழ்நாடு கைத்தறி வளர்ச்சிக் கழகம், தமிழ்நாடு கூட்டுறவு துணிநூல் பதனிடும் ஆலை, ஈரோடு மற்றும் கோஆப்டெக்ஸ் நிறுவனம் ஆகிய அரசு நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டு, தற்போது விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு வருகிறது.

விருதுநகர் கைத்தறி பெருங்குழுமத்தின் மூலம் குழுமத்திலுள்ள கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு வட்டி மானியம் தொகை ரூபாய் 2 கோடி மத்திய அரசால் அனுமதிக்கப்பட்டுள்ளது. இதன்படி குழுமத்திலுள்ள கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் 2013-14ஆம் ஆண்டில் பெற்ற காசுக்கடனுக்கு செலுத்தி வட்டியில் 6 சதவீதம் வட்டி மானியம், விருதுநகர் கைத்தறி பெருங்குழுமத்தின் மூலம் வழங்கப்படுகிறது. தற்போது அனுமதிக்கப்பட்ட மொத்த வட்டி மானியம் தொகை ரூ.1 கோடியே 68 இலட்சமாகும். இதனால், விருதுநகர், மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் ஆகிய 6 மாவட்டங்களைச் சார்ந்த 169 கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் பயன்பெறுகின்றன.

மேற்படி வட்டி மானியத் தொகையினை 6 மாவட்டங்களைச் சார்ந்த 22 கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் ளு.கோகுல இந்திரா கோ-ஆப்டெக்ஸ் தலைமை அலுவகத்தில் வழங்கினார். மீதமுள்ள 147 கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு இதே நாளில் அந்தந்த மாவட்டங்களின் கைத்தறி உதவி இயக்குநர் மற்றும் கோ-ஆப்டெக்ஸ் அலுவலர்களால் வழங்கப்பட உள்ளது.

இந்நிகழ்ச்சியில் கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த் துறையின் அரசு முதன்மைச் செயலாளர். ஹர்மந்தர்சிங், கோ-ஆப்டெக்ஸ் தலைவர் கே.வி.மனோகரன், கோ-ஆப்டெக்ஸ் மேலாண்மை இயக்குநர் . தி.ந.வெங்கடேஷ், மற்றும் கோ-ஆப்டெக்ஸ் துணை தலைவர் ளு. ஜெயந்தி சோமசுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

புட்நோட்:

கோ-ஆப்டெக்ஸ் தலைமை அலுவகத்தில் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு அமைச்சர் கோகுல இந்திரா மானியத்தொகையை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த் துறையின் அரசு முதன்மைச் செயலாளர். ஹர்மந்தர்சிங், கோ-ஆப்டெக்ஸ் தலைவர் கே.வி.மனோகரன், கோ-ஆப்டெக்ஸ் மேலாண்மை இயக்குநர் . தி.ந.வெங்கடேஷ், மற்றும் கோ-ஆப்டெக்ஸ் துணை தலைவர் ளு. ஜெயந்தி சோமசுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்