முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மிகச்சிறந்த ஆசிரியர்களை கொண்ட கல்விக்குழு அமைக்க உத்தரவு

வெள்ளிக்கிழமை, 28 நவம்பர் 2014      தமிழகம்
Image Unavailable

சென்னை - பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் டூ தேர்வுகளில் மாணவர்கள் நூறு சதவீதம் தேர்ச்சி பெற வசதியாக மாவட்ட வாரியாக மிகச்சிறந்த ஆசிரியர்களை கொண்ட கல்விக்குழு அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் 100 சதவீத தேர்ச்சி பெறும்வகையில் மாணவர்களுக்கு கற்பிப்பது தொடர்பாக கடந்த 25 ந்தேதி பள்ளிக்கல்வித்துறை செயலாளர் சபீதா தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாணவர்கள் 100 சதவீத மதிப்பெண்கள் பெற வசதியாக மாவட்ட வாரியாக சிறந்த ஆசிரியர்களை கொண்ட கல்விக்குழுக்கள் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது அந்த ஆசிரியர்கள் அனைவரும் தங்களது வகுப்புகளில் நூறு சதவீதம் தேர்ச்சி பெற செய்தவர்களாக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.
சென்னை, காஞ்சிபுரம் ,திருவள்ளூர், விழுப்புரம் கடலூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய கல்விக்குழுக்களின் கூட்டம், சென்னை நந்தனம் ஆல்பா மெட்ரிக் பள்ளியிலும் வேப்பேரி பென்டிங் மேல்நிலைப்பள்ளியிலும் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மேற்கண்ட மாவட்டங்களில் அமைக்கப்பட்ட கல்விக்குழுக்களில் இடம் பெற்ற ஆசிரியர்கள் பங்கேற்றனர். இந்த கல்விக்குழு கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் ராமேஸ்வர முருகன் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்று 100 சதவீத தேர்ச்சிக்கு ஆலோசனைகளை தெரிவித்தனர். இந்த பயிற்சி முகாம் இன்றும் தொடர்ந்து நடைபெறும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து