முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எல்லையில் ஊடுருவிய தீவிரவாதி சுட்டுக்கொலை

வெள்ளிக்கிழமை, 28 நவம்பர் 2014      இந்தியா
Image Unavailable

ஜம்மு - ஜம்மு காஷ்மீர் மாநில எல்லையில் ஊடுருவிய தீவிரவாதிகளில் மிச்சமிருந்த ஒரு தீவிரவாதி நீண்ட துப்பாக்கிச் சண்டைக்குப் பின்னர் சுட்டுக் கொல்லப்பட்டதாக ராணுவ உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளர்.
எல்லையில் பதுங்குகுழியில் பதுங்கியிருந்த தீவிரவாதிக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நேற்று காலை முதல் மீண்டும் பயங்கர துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதில் தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டார்.
முன்னதாக, நேற்று முன்தினம் ஜம்மு மாவட்டம் ஆர்னியா பகுதியில் உள்ள சர்வதேச எல்லை வழியாக, தீவிரவாதிகள் சிலர் நேற்று காலையில் இந்திய பகுதிக்குள் ஊடுருவினர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் ராணுவம், எல்லை பாதுகாப்புப் படை, காவல் துறையைச் சேர்ந்த பாதுகாப்புப் படையினர் அப்பகுதியை சுற்றி வளைத்து தீவிரவாதிகளை தேடினர்.
அப்போது எல்லையிலிருந்து 4 கி.மீ. தொலைவில் உள்ள பிண்டி கட்டார் கிராமத்தில் ராணுவத்தால் கைவிடப்பட்ட பதுங்கு குழியில் அவர்கள் பதுங்கி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து தீவிரவாதிகளை குறிவைத்து பாதுகாப்புப் படையினர் தாக்குதல் நடத்தினர். பதிலுக்கு தீவிரவாதிகளும் தாக்குதல் நடத்தினர்.
இருதரப்புக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதில் 4 தீவிரவாதிகள், 3 வீரர்கள், 3 பொதுமக்கள் என 10 பேர் கொல்லப்பட்டனர். காயமடைந்த 3 பேர் அருகில் உள்ள மருத்து வமனையில் அனுமதிக்கப்பட்டனர். அப்பகுதியிலிருந்த ஒரு காரை பாதுகாப்புப் படையினர் பறிமுதல் செய்தனர்.
மேலும் பதுங்கி இருந்த ஒரே ஒரு தீவிரவாதியுடன் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சண்டையிட்டனர். பதுங்கு குழியில் ஒரே ஒரு தீவிரவாதி ராணுவத்தின் அதிரடி தாக்குதலில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து