முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெரம்பலூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்காக செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து ஆய்வு கூட்டம் : கலெக்டர் க.நந்தகுமார், தலைமையில் நடந்தது

வெள்ளிக்கிழமை, 23 டிசம்பர் 2016      பெரம்பலூர்
Image Unavailable

தமிழக அரசால் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு வகையான நலத்திட்ட உதவிகள் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்படுகின்றன. இத்திட்டங்கள் அனைத்தும் உரியவர்களிடம் கொண்டு செல்லும் வகையில் மாவட்ட அளவில் மாவட்ட கலெக்டர் அவர்களை தலைவராக கொண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் உள்ளிட்ட 17 உறுப்பினர்களை கொண்ட மாற்றுத்திறனாளிகளுக்கான ஒருங்கிணைப்பு குழு ஒன்று மாவட்ட அளவில் அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவின் ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம் நேற்று (23.12.2016) மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட கலெக்டர் க.நந்தகுமார், தலைமையில்; நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பேசியதாவது: மாற்றுத்திறனாளிகளின் நல வாழ்விற்காக தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. இத்திட்டங்கள் மூலமாக மாற்றுத்திறனுடையவர்களின் வாழ்வாதாரம் மேம்பாடு அடைந்துள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து பயனாளிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரங்கள் வழங்குதல், தெருமுனை நாடகங்கள் நடத்துதல், வீடியோ படக்காட்சிகளை ஒளிபரப்பு செய்தல் உள்ளிட்ட நடவடிக்ககைகளை தொடர்ந்து மேற்ககொள்ள வேண்டுமென்று மாற்றுத்திறனாளிகள் நல அலுவலருக்கு மாவட்ட கலெக்டர் அறிவுரை வழங்கினார். மேலும், மாற்றுத் திறனாளிகளுக்கு பராமரிப்பு உதவித் தொகையை மாதந்தோறும் வங்கி மூலம் அவர்களின் இருப்பிடத்திற்கே சென்று சம்மந்தப்பட்ட அதிகாரிகள் தொய்வின்றி வழங்கவும், மாற்றுத்திறனாளிகளுக்கான இலவசமாக தேசிய அடையாள அட்டைகளை தகுதியுள்ள அனைவருக்கும் வழங்க ஆவணம் செய்யவேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் வழங்கப்படும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை பெறுவதிலும், பிறதுறைகள் மூலம் வழங்கப்படும் நலத்திட்ட உதவிகளைப் பெறுவதிலும் அவர்களுக்கு முன்னுரிமைகளை வழங்க வேண்டும். இவ்வாறு பேசினார். இக்கூட்டத்தில்; கூட்டத்தில் துணைஇயக்குநர்(மருத்துவப்பணிகள்) மரு.சம்பத், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் தியாகராஜன், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் எலிசபெத், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ராமகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்