திண்டுக்கல் அருகே கார் மோதி இரண்டு வாலிபர்கள் பரிதாப சாவு

வியாழக்கிழமை, 29 டிசம்பர் 2016      திண்டுக்கல்
4

 

திண்டுக்கல் பாரதிபுரத்தைச் சேர்ந்த சுப்பிரமணி மகன் பாலாஜி(21). இவரது நண்பர் சுப்பிரமணி(21). இருவரும் ஐ.டி.. முடித்துள்ளனர். ஒரே தெருவில் வசித்து வந்ததால் நெருங்கிய நண்பர்களாக பழகி வந்தனர். கடந்த 20 நாட்களுக்கு முன்பு திண்டுக்கல் _ மதுரை நான்கு வழிச்சாலையில் போக்குவரத்து நகர் எதிரில் உள்ள தனியார் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்தனர். சம்பவத்தன்று இரவு வேலைக்கு சென்று விட்டு நேற்று அதிகாலையில் வீட்டிற்கு செல்வதற்காக 4 வழிச்சாலையில் ரோட்டைக் கடந்து கொண்டிருந்தனர். அப்போது திண்டுக்கல்லில் இருந்து மதுரை நோக்கி மின்னல் வேகத்தில் வந்த கார் அவர்கள் இருவர் மீதும் மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

 

 

 

 

 

 

 

 

 

சம்பவத்தைப் பார்த்ததும் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் காரை விரட்டி பிடிக்க முயன்றும் முடியவில்லை. கொடைரோடு சோதனை சாவடிக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அந்த கார் டோல்கேட் வழியாக செல்லாமல் வேறு வழியில் சென்று விட்டது. சம்பவம் குறித்து கேள்விப்பட்டதும் அம்பாத்துரை போலீசார் அங்கு விரைந்து வந்து உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் உயிரிழப்பை ஏற்படுத்திய காரை தேடி வருகின்றனர்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: