முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பயிர் பாதிப்பு குறித்து அமைச்சர் நேரில் ஆய்வு

சனிக்கிழமை, 7 ஜனவரி 2017      தேனி
Image Unavailable

தேனி - தமிழக அரசின் உத்தரவின்படி, தேனி மாவட்டத்திலுள்ள ஆண்டிபட்டி, தேனி, உத்தமபாளையம், போடிநாயக்கனூர், பெரியகுளம் ஆகிய வட்டத்திற்குட்பட்ட கிராமங்களிலுள்ள விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டு பாதிப்புக்குள்ளான பயிர்களை நேற்று வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அரசு செயலரும், மாவட்ட ஆய்வு அலுவலருமான கார்த்திக், மாவட்ட கலெக்டர்  வெங்கடாசலம் ஆகியோர் முன்னிலையில் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வின்போது. ஆண்டிபட்டி வட்டத்திற்குட்பட்ட சண்முகசுந்தபுரம் கிராமத்தில் 200.00 ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்டு பாதிப்புக்குள்ளான மக்காசோள பயிர், தேனி வட்டத்திற்குட்பட்ட அம்பாசமுத்திரம் கிராமத்தில் 7.00 ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்டு பாதிப்புக்குள்ளான மக்காசோளப் பயிர், ஜங்கால்பட்டி ஊராட்சிக்குட்பட்ட வெங்கடாசலபுரம் கிராமத்தில் 3.00 ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்டு பாதிப்புக்குள்ளான மக்காசோள பயிர், 7.00 ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்டு பாதிப்புக்குள்ளான கம்பு பயிர், உத்தமபாளையம் வட்டத்திற்குட்பட்ட டி.மீனாட்சிபுரம் கிராமத்தில் 12.50 ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்டு பாதிப்புக்குள்ளான சோளம் பயிர், 11.60  ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்டு பாதிப்புக்குள்ளான உளுந்து பயிர், போடிநாயக்கனூர் வட்டத்திற்குட்பட்ட ராசிங்காபுரம் கிராமத்தில் 10.00 ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்டு பாதிப்புக்குள்ளான சோளம் பயிர், சிலமலை கிராமத்தில் 5.00 ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்டு பாதிப்புக்குள்ளான சோளம் மற்றும் கம்பு பயிர்கள், பூதிப்புரம் கிராமத்தில் 20.00 ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்டு பாதிப்புக்குள்ளான பருத்தி பயிர், பெரியகுளம் வட்டத்திற்குட்பட்ட எண்டபுளி கிராமத்தில் 37.50 ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்டு பாதிப்புக்குள்ளான எள், உளுந்து, பாசிப் பயிர்கள் ஆகிய பாதிப்புக்குள்ளான பயிர்களை  வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டதோடு விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.

வனத்துறை அமைச்சர் தெரிவிக்கையில், தமிழக அரசு விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டு பாதிப்புக்குள்ளான பயிர்களுக்கு உரிய நிவாரணம் விவசாயிகளுக்கு வழங்கிட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதனடிப்படையில், தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் நிலங்களில் பயிரிடப்பட்டு பாதிப்புக்குள்ளான பயிர்களை அமைச்சர்கள் மற்றும் அரசு செயலர்களை கொண்டு குழுக்கள் அமைக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனைத்தொடர்ந்து தேனி மாவட்டத்திலும் நிலங்களில் பயிரிடப்பட்டு பாதிப்புக்குள்ளான பயிர்கள் கணக்கீடு செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் பருவ மழை, இயல்பான மழை அளவை விட குறைவாக பொய்த்ததன் மூலம் முல்லைபெரியாறு அணை, வைகை அணை, சோத்துப்பாறை அணை மற்றும் மஞ்சளாறு அணை ஆகிய அணைகளின் நீர்மட்டம் குறைந்துள்ளதால் பயிர்கள் பாதிப்படைந்துள்ளது.  மேலும், பயிர் பாதிப்புக்களை துல்லியமாக கணக்கீடு செய்திட கைபேசியின் மூலம் புவன் என்ற செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் கிராம நிர்வாக அலுவலர்கள், உதவி வேளாண் அலுவலர்கள் பயிர் பாதிப்புகள் குறித்து புகைப்படங்களுடன் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. இப்பணிகள் மாவட்ட கலெக்டர் அவர்களின் நேரடி கண்காணிப்பில் நடைபெறுவதால் பயிர் சேதங்கள் குறித்து துல்லியமாக கணக்கிட்டு விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க விரைந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மேலும், தேனி மாவட்டத்தில் உள்ள 113 வருவாய் கிராமங்களில் பயிரிடப்பட்டு, பாதிப்புக்குள்ளான அனைத்து பயிர்களையும் ஆய்வு மற்றும் மதிப்பீடு செய்து அரசுக்கு விரைந்து அறிக்கை தாக்கல் செய்யப்படும் என  வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் தெரிவித்தார்.

ஆய்வுக்குப்பின்னர், மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், பயிர் பாதிப்பு கணக்கீடு பணிகள் குறித்து, வருவாய்த்துறை, வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, புள்ளியியல் துறை, ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி துறை மற்றும் பிற துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம்  வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் தலைமையில், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அரசு செயலரும், மாவட்ட ஆய்வு அலுவலருமான அ.கார்த்திக், மாவட்ட கலெக்டர் ந.வெங்கடாசலம் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

இந்நிகழ்வுகளின் போது, தேனி பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.பார்த்திபன் அவர்கள், மாவட்ட வருவாய் அலுவலர் செ.பொன்னம்மாள், சட்டமன்ற உறுப்பினர்கள் தங்க தமிழ்செல்வன், எஸ்.டி.கே.ஜக்கையன், கே.கதிர்காமு, வேளாண்மைத்துறை இணை இயக்குநர் மூர்த்தி, மாவட்ட வன அலுவலர் மாரிமுத்து, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ஞானசேகரன், வருவாய் கோட்டாட்சியர்கள் ரவிச்சந்திரன், ஆனந்தி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) சந்திரசேகரன், தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் கிஷோர்குமார், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கிருஷ்ணவேணி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் ரகுபதி, உதவி ஆணையர் (கலால்) கார்த்திகேயன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) வடிவேல், உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) சேதுராமன், தனி வட்டாட்சியர் (பேரிடர் மேலாண்மை) செந்தில் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்