முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நேஷனல் பொறியியல் கல்லூரியில் மின்னியல் மற்றும் மின்னணுவியல் சங்கம்

செவ்வாய்க்கிழமை, 10 ஜனவரி 2017      தூத்துக்குடி

கோவில்பட்டி

கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் ஒரு நாள் தொழில்நுட்ப கருத்தரங்கம் மின்னியல் மற்றும் மின்னணுவியல் சங்கத்தின் சார்பில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக துறையின் முன்னாள் மாணவர்,  பிரைட்ஸ்ன் டேவோட்டா, மேனேஜர்., நெட்ஸ்கோப், கலிபோர்னியா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

இவ்விழாவிற்கு கல்லூரி முதல்வர்  சண்முகவேல் தலைமை வகித்தார், மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறைத்தலைவர்  வில்ஜுஸ் இருதயராஜன் முன்னிலை வகித்தார். இறுதியாண்டு மாணவர் ஜெகன் கூட்டத்தினரை வரவேற்றார். கூட்டமைப்பின் பொருளாளரும், இறுதியாண்டு மாணவர் மாடசாமி விருந்தினரை அறிமுகபடுத்தினார்.

சிறப்பு விருந்தினர் தமது உரையில் தனது கல்லூரி அனுபவத்தை  மாணவர்களிடம் பகிர்ந்து கொண்டார். மாணவர்களை பொறியியல் துறையில் அறிவினை மேலும் வளர்த்துக் கொள்ள அறிவுரை வழங்கினார். ஒரு நாள் தொழில்நுட்ப கருத்தரங்கில் மாணவர்களின் விளக்கக்காட்சி, பேப்பரி, மோக் இட், க்லீம் ஷேர், ஒவெர்சேர் போன்ற நிகழ்சிகள்  நடத்தினர். இந்நிகழ்ச்சியின் நிறைவு விழா மாலை 4.30 மணியளவில் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை கல்லூரி இயக்குனர், முதல்வர் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி மின்னியல் மற்றும் மின்னணுவியல் சங்கத்தின் ஒருங்கினைப்பாளர்  மகேஸ்வரி, துறைப்  பேராசிரியர்கள்  மற்றும் மாணவர்கள் சிறப்பாக செய்திருந்தனர். இறுதியாண்டு மாணவி செல்வ கார்த்திகா நன்றியுரை கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்