முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சம்பள சேமிப்பு திட்டத்தின் கீழ் மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற

வியாழக்கிழமை, 12 ஜனவரி 2017      விருதுநகர்
Image Unavailable

 விருதுநகர்  - விருதுநகர் மாவட்டத்தில் சிறுசேமிப்பு திட்டத்தின் கீழ் 2015-16-ஆம் ஆண்டு; மாவட்ட அளவில் மகளிர் முகவர்கள், நிலை முகவர்கள் மற்றும் சம்பள சேமிப்பு திட்டத்தின் கீழ் அதிக வசூல் செய்தவர்களுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அ.சிவஞான்ம்; தலைமையில் நடைபெற்றது.

சம்பள சேமிப்பு திட்டத்தின் கீழ் மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற காவல் துறைக்கு கேடயத்தினை கூடுதல் காவல் கண்காணிப்பாளர்(தலைமையிடம்) ஆ.வே.மதி அவர்களுக்கும், மகளிர் முகவரில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற திருமதி. வி.கிருத்திகா என்பவருக்கும், நிலைமுகராக மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற முத்துச்சேரன் என்பவருக்கும் மாவட்ட ஆட்சியர் அவர்களால் ரூ.3000-க்கான தேசிய சேமிப்பு பத்திரமும், கேடயமும்; வழங்கி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது : -

‘இன்றைய சேமிப்பு நாளைய வாழ்வின் பாதுகாப்பு" என்பதற்கேற்ப எதிர்கால வாழ்க்கை ஒளிமயமாக திகழ்ந்திட ஒவ்வொரு குடிமக்களும் சிறுசேமிப்பின் பழக்கத்தினை அவசியம் கடைபிடிக்கப்பட வேண்டும். அவ்வாறு சிறுக சிறுக சேமித்த தொகை பெருந்தொகையாகி அவசர காலங்களில் ஏற்படும் எதிர்பாரா செலவினங்களை மேற்கொள்ள உதவும். மக்கள் தங்கள் கடின உழைப்பால் ஈட்டிய செல்வத்தை தங்களது குடும்பத்திற்கு பயன்படும் வகையில் சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்வதால், அந்த தொகைக்கு உத்தரவாதமும், எதிர்கால வாழக்கைக்கு பாதுகாப்பும் கிடைத்திடும்.

விருதுநகர் மாவட்டத்திற்கு உட்பட்ட கிராம ஊராட்சிகள், பேருராட்சிகள் மற்றும் நகராட்சி பகுதிகளில் சிறுசேமிப்பு திட்ட முகவர்கள் மூலமாக பொதுமக்களிடையே சேமிக்கும் பழக்கத்தினை எடுத்துரைத்து அவர்கள் மூலமாக அஞ்சலகங்களில் சேமிக்கப்பட்டு வருகிறது.

அதில் 464 மகளிர் முகவர் மூலமாக 7213.00 லட்சங்களும், 47 நிலை முகவர் மூலமாக 19234.00 லட்சங்களும் பல்வேறு சேமிப்பு திட்டத்தின் மூலமாக அஞ்சலகங்களில் முதலீடு செய்யப்பட்டு வருகிறது. அரசுதனியார் நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களிடம் சம்பள பட்டியலில் மாதாந்திர தொடர்வைப்பு திட்டத்தில் பிடித்தம் செய்து அலுவலகம் மூலமாகவே அஞ்சலகங்களில் செலுத்தப்பட்டு வருகிறது. மேலும் தொகையினை கூடுதலாக வசூல் செய்வதற்கு ஊராட்சி ஒன்றியங்களில் முகவர்களுக்கு மாதாந்திர கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் சிறுசேமிப்புதுறை இயக்குநரால் வெளியிடப்பட்ட திட்டம் குறித்த துண்டு பிரசுரங்களை முகவர்கள் மூலமாக பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

சேமிப்பு தொடர்பாக அஞ்சலகங்களில் 7.7 சதவீத வட்டி விகிதத்தில் 5 ஆண்டு முதிர்வு கால அளவில் அஞ்சலக தொடர் வைப்புத்திட்டம் (Pழுசுனு), 8.5 சதவீத வட்டி விகிதத்தில் 21 ஆண்டு முதிர்வு கால அளவில் செல்வமகள் சேமிப்பு திட்டம் , 4.0 சதவீத வட்டி விகிதத்தில் 1 ஆண்டு முதிர்வு கால அளவில் குறித்த கால முதலீடு திட்டம் , 7.0 சதவீத வட்டி விகிதத்தில் 2 ஆண்டு முதிர்வு கால அளவில் குறித்த கால முதலீடு திட்டம் , 7.1 சதவீத வட்டி விகிதத்தில் 3 ஆண்டு முதிர்வு கால அளவில் குறித்த கால முதலீடு திட்டம் 7.3 சதவீத வட்டி விகிதத்தில் 5ஆண்டு முதிர்வு கால அளவில் குறித்த கால முதலீடு திட்டம் 8.0 சதவீத வட்டி விகிதத்தில் 15 ஆண்டு முதிர்வு கால அளவில் பொது சேமநல நிதி 8.0 சதவீத வட்டி விகிதத்தில் 5 ஆண்டு முதிர்வு கால அளவில் அஞ்சலக மாதாந்திர வருவாய் திட்டம் 8.0 சதவீத வட்டி விகிதத்தில் 5 ஆண்டு முதிர்வு கால அளவில் தேசிய சேமிப்பு பத்திரம் 7.7 சதவீத வட்டி விகிதத்தில் 112 மாதம் முதிர்வு கால அளவில் கிஸான் விகாஸ் பத்திரம் இ 8.5 சதவீத வட்டி விகிதத்தில் 5 ஆண்டு முதிர்வு கால அளவில் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் என பல்வேறு பாதுகாப்பான திட்டங்கள் சிறுசேமிப்பு திட்டங்கள் உள்ளன. ‘சிறுகக்கட்டி பெருக வாழ்" என்பதனை உணர்ந்து விருதுநகர் மாவட்ட மக்கள் அனைவரும் தங்கள் வாழ்வு வளம்பெற அருகில் உள்ள அஞ்சலகங்களில் தொடர் சேமிப்பு கணக்கினை துவக்கி பயன்பெற வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

இந்நிகழ்வின் போது மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(சிறுசேமிப்பு) கொ.ராஜாமணி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா.ஜெயஅருள்பதி உடன் இருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்