முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் பிப். 6-ம் தேதி மகா கும்பாபிஷேகம்

ஞாயிற்றுக்கிழமை, 22 ஜனவரி 2017      ஆன்மிகம்
Image Unavailable

திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில், பிப்ரவரி 6-ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதனையொட்டி, முன்னேற்பாடுகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம்  நேற்று நடைபெற்றது.

பஞ்ச பூதத்தலங்களில், அக்னி தலமாக விளங்கும் திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில், மறைந்த  முதலமைச்சர் ஜெயலலிதா  உத்தரவின்பேரில், கடந்த 2002-ம் ஆண்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. 14 ஆண்டுகளுக்குப் பின்னர், வரும் 6-ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

இதற்கான பணிகள், கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்று வந்தன. கோவில் ராஜகோபுரம் ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், அம்மணியம்மன் கோபுரம், திருமஞ்சன கோபுரம் உள்ளிட்ட கோபுரங்கள் 3 கோடியே 36 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், இதர விமானங்கள் மற்றும் சன்னதிகள் 2 கோடியே 93 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் திருப்பணிகள் நடைபெற்று பணிகள் நிறைவுபெற்றுள்ளன.

இந்நிலையில், மகா கும்பாபிஷேக முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம், மாவட்ட கலெக்டர்  பிரசாந்த் மு. வடநேரே தலைமையில் நடைபெற்றது. இந்துசமய அறநிலையத்துறை இணை ஆணையர்  ஹரிப்ரியா உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்