முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வத்தலக்குண்டு அருகே பழமையை விரும்பும் கிராமமக்கள்

புதன்கிழமை, 25 ஜனவரி 2017      திண்டுக்கல்
Image Unavailable

வத்தலக்குண்டு - திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே பழமையை விரும்பும் நோயின்றி வாழும் கிராமமக்கள் அதிசயம்.

தற்போதுள்ள சூழலில் கூரை வீடு மாறி மாடி வீடு, சென்ட்ரிங் வீடு, லாகடம் போட்ட வீடு தற்போது குளுகுளு வசதியுடன் குடியிருப்புகளை வாஸ்துப்படி அமைத்து குடியிருப்புகளில் வாழ்ந்து வருகிறார்கள் பொதுமக்கள். எந்த அளவிற்கு பொதுமக்கள் பணத்தினை கொட்டி செலவு செய்து ஆடம்பரமாக ஏசி வசதியுடன் மேலும் டைல்ஸ் அமைத்து கட்டி குடியிருந்து வருகிறார்கள். இவ்வளவு சொகுசான வாழ்க்கை வாழ்ந்து வரும் பொதுமக்கள் எந்த அளவிற்கு சொகுசை அனுபவிக்கிறார்களோ அந்த அளவிற்கு குறிப்பாக சர்க்கரை நோய், மூட்டுவலி, தைராய்டு பிரச்சனை, இடுப்பு வலி, பெண்களுக்கு கழுத்துவலி இப்படி புதிய புதிய வியாதிகளுடன் மக்கள் அனுபவித்து வருகிறார்கள். அதே சமயம் இந்த காலகட்டத்தில் திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகில் உள்ள தேவரப்பன்பட்டி ஊராட்சியில் சின்னக்கவுண்டன்பட்டி பகுதி வினோபாஜி நகரில் ஆதிகாலம் முதல் இன்று வரையில் தென்னைங்கிடுகளால் மேயப்பட்டு சுற்றுச்சுவர் மண்சுவரால் அமைத்து வீட்டின் அருகில் இயற்கை மூலிகை குணம் வாய்ந்த வேம்பு, ஆலமரம், போன்ற மரங்களின் அருகில் படத்தில் கண்டபடி சாதாரண குடிசையில் இப்பகுதி மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். முக்கிய காரணம் என்னவென்றால் இவர்களுக்கு மேற்கண்ட வியாதிகள் வருவதில்லை. இன்று வரையில் சுகாதாரத்துடன் முழு உடல் ஆரோக்கியத்துடன் வாழ்ந்து வருகிறார்கள். இந்த பகுதி மக்கள் சராசரியாக என்பது வயது முதல் தொன்னூறு வயது வரை வாழ்ந்து வருகிறார்கள் என்பது அதிசயமாக உண்மையாகும். ஆக இப்பகுதி மக்கள் பழமையை விரும்பி நோயின்றி கிராம மக்கள் வாழ்ந்து வருகிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்