முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேலூர் சூரக்குண்டு கிராமத்தில் கிராமசபை கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் பங்கேற்றார்.

வியாழக்கிழமை, 26 ஜனவரி 2017      மதுரை
Image Unavailable

மேலூர். - 68வது குடியரசு தின விழாவையொட்டி கிராம சபை கூட்டம் மேலூர் அருகே உள்ள  சூரக்குண்டு கிராமத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவராவ், துணை ஆட்சித்தலைவர் ரோகிணி ராம்தாஸ், ஆகியோர் கலந்துகொண்டனர். கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் கண்மாய்களை தூர்வாரவேண்டும் என்றும், தார் சாலை வசதி மற்றும் பஸ்வசதி செய்துதரவேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவராவுக்கு தேசிய வாக்காளர் விழிப்புணர்வு பேரணிக்காக குடியரசு தலைவரிடம் விருது பெற்றதை தொடர்ந்து பொதுமக்கள் மாவட்ட ஆட்சியருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

இறுதியில் குழந்தை தொழிலாளர் இல்லாத மாவட்டமாக இருக்கவேண்டும் என்று உறுதிமொழி எடுத்தனர். ஸ்பார்ஷ் தொழுநோய் விழிப்புணர்வு கிராமசபை கூட்டத்தில் எடுத்துரைக்கப்பட்டு மக்கள் உறுதிமொழி ஏற்றனர்.  வருவாய் கோட்டாட்சியர் பெனடிக் தர்மராய், உதவி மாவட்ட ஊராட்சி அலுவலர் லெட்சுமி, வட்டார வளர்ச்சி அலுவலர் கலா, மேலூர் வட்டாட்சியர் தமிழ்ச்செல்வி, சமூக நல திட்ட தாசில்தார் கோபாலகிருஷ்ணன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராமமூர்த்தி, வட்ட வழங்கல் அலுவலர் விஜயலெட்சுமி, மதுரை மாவட்ட நலக் கல்வியாளர் ராஜேந்திரன், வெள்ளலூர் வட்டார மேற்பார்வையாளர் பாலகிருஷ்ணன், வருவாய் ஆய்வாளர் மணிகண்டபிரபு, பொறியாளர்கள் துரைக்கண்ணன், நேரு, சுகன்யா, கிராம நிர்வாக அலுவலர் பால்ராஜ், உட்பட அனைத்து துறை அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்