முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீர் பிரச்சினை குறித்து ஐ.நா.வில் பாகிஸ்தான் பேசுவதற்கு இந்தியா கடும் கண்டனம்

வெள்ளிக்கிழமை, 28 ஏப்ரல் 2017      உலகம்
Image Unavailable

ஐ,நா  - ஐ.நா. பொதுச் சபையில் சர்வதேச தகவல் குழு உறுப்பினர்கள் பங்கேற்ற நிகழ்ச்சி கடந்த 25-ம் தேதி நடைபெற்றது.

ஐ.நா. நடவடிக்கை  தேவை
அப்போது ஐ.நா.வுக்கான பாகிஸ்தான் பிரதிநிதி மசூத் அன்வர் பேசும்போது, ‘‘உலக ஒருமைப்பாட்டு சர்வதேச தினத்தை முன்னிட்டு பாலஸ்தீன மக்களுடன் இணைந்து ஐ.நா.வின் தகவல் குழு எடுத்த நடவடிக்கைகளுக்குப் பாராட்டுத் தெரிவிக்கிறேன். அதேபோல், வெளிநாட்டு (இந்தியாவின்) ஆக்கிரமிப்பில் காஷ்மீர் மக்கள் பல்வேறு பிரச்சினைகளைச் சந்தித்து வருகின்றன. அந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண ஐ.நா. நடவடிக்கை எடுக்க வலி யுறுத்துகிறோம்’’ என்று கூறினார். மசூத் அன்சார் காஷ்மீர் பிரச்சினை குறித்து பேசியதும் உடனடியாக, ஐ.நா.வுக்கான இந்திய நிரந்தர பிரதிநிதி எஸ்.ஸ்ரீனிவாச பிரசாத் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். பிரசாத் குறுக்கிட்டு பேசுயபோது, ‘‘காஷ்மீர் பிரச்சினை இரு நாடு களுக்கு இடையில் உள்ள பிரச்சினை. இதை ஐ.நா. கூட்டத்தில் எழுப்ப வேண்டிய அவசியம் இல்லை’’ என்று கடுமையாக எதிர்த்தார்.

பிரசாத் கண்டனம்
இந்த விவாதம் நடைபெற்ற போது ஐ.நா.வுக்கான பாகிஸ்தான் தூதர் மலீஹா லோதியும் சபை யில் இருந்தார். பிரசாத் கண்டனம் தெரிவித்த பிறகும் கூட, அன்வரைத் தொடர்ந்து பேசும்படி மலீஹா லோதி வலியுறுத்தினார். பின்னர் இந்தியா சார்பில் பிரசாத் பேசிய போது, ‘‘காஷ்மீர் பிரச்சினையை ஐ.நா. சபை கூட்டத் தில் எழுப்ப வேண்டிய அவசியம் இல்லை. ஐ.நா.வுடன் தொடர் பில்லாத ஒரு விஷயத்தைப் பற்றி தொடர்ந்து பேசுவதற்கு அனுமதி அளிக்காத வகையில் இந்த சபை தலைவருக்கு இந்தியா சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்