முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொற்கோயிலில் ராகுல் காந்தி வழிபாடு

சனிக்கிழமை, 10 ஜூன் 2017      ஆன்மிகம்
Image Unavailable

அமிர்தசரஸ், அமிர்தசரஸில் உள்ள பொற்கோயிலுக்கு ராகுல் காந்தி திடீரென்று சென்று வழிபாடு செய்தார்.

சீக்கியர்களின் புனித ஸ்தலமாக கருதப்படும் பொற்கோயிலில்தான் தனிநாடு கோரிய காலிஸ்தான் தீவிரவாதிகள் மறைந்திருந்து போராட்டம் நடத்தினர். அவர்களை ஆபரேஷ் புளு ஸ்டார் நடவடிக்கையின் மூலம் வெளியேற்றி போராட்டம் அடக்கப்பட்டது. இதன் விளைவாக இந்திரா காந்தி, அவரது பாதுகாவலரால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். இதனையொட்டி டெல்லியில் கலவரம் நடந்தது.

அதன்பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக அமைதி திரும்பியது. சமீபத்தில் காலிஸ்தான் பிரிவினைவாதிகள் தலைதூக்க ஆரம்பித்துள்ளனர்.  பொற்கோயிலில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் வழிபாடு செய்துவிட்டு காலிஸ்தான் தனிநாடு கோரி கோஷமிட்டனர்.

இந்தநிலையில் காங்கிரஸ் துணைத்தலவர் ராகுல் காந்தி நேற்று பிற்பகல் 4 மணிக்கு திடீரென்று பொற்கோயிலுக்கு சென்று வழிபட்டார். அவர் முன்னறிவிப்பு எதுவும் இல்லாமல் பொற்கோயிலுக்கு சென்று வழிபட்டார். ஆனால் பாதுகாவலர்கள் ராகுலுடன் சென்றனர். கோயிலுக்குள் செல்லும்போது முக்கிய பிரமுகர்கள் செல்லும் வழியில் செல்லாமல் சாதாரண மக்கள் செல்லும் வழியில் கர்பக்கிரகத்திற்கு சென்று சாமியை வழிபட்டார். ராகுல் காந்தியுடன் அமிர்தசரஸ் பாராளுமன்ற உறுப்பினர் குருஜித் சிங் அவ்ஜ்லா மற்றும் உள்ளூர் காங்கிரஸ் தலைவர்கள் சென்றனர்.

வழிபாட்டிற்கு பின்னர் ராகுல் காந்தி, நிருபர்களுக்கு பேட்டி எதுவும் கொடுக்காமல் சென்றுவிட்டார். பொற்கோயிலுக்கு ராகுல் சென்றது அவரின் தனிப்பட்ட பயணம் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கடந்த சட்டமன்ற தேர்தலில் பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் வெற்றிபெற்று ஆட்சியை பிடித்த பின்னர் முதன் முதலாக அங்கு ராகுல் தற்போதுதான் சென்றுள்ளார்.   

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து