முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருவள்ளுர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

ஞாயிற்றுக்கிழமை, 18 ஜூன் 2017      திருவள்ளூர்
Image Unavailable

திருவள்ளுர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் ஏ.சுந்தரவல்லி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் கூறியதாவது:

திருவள்ளுர்; மாவட்டத்தில் இதுவரை சொர்ணவாரி பருவத்தில் நெற் பயிரில் 4688 ஹெக்டெரும், திருந்திய நெற்பயிரில் 3507 ஹெக்டெரும், எண்ணைய் வித்துக்கள் 132 ஹெக்டெரும், கரும்பு நடவு 89 ஹெக்டேரும், மறுதாம்பு 2331 ஹெக்டேரும் பயிரிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார். திருவள்ளுர் மாவட்டத்தில் நடப்பு மாதம் முடிய நிகர பயிர் சாகுபடி பரப்பு 3037 ஹெக்டெர் ஆகும். 2014-15ம் ஆண்டிற்கான கரும்பு நிலுவைத் தொகையான ரூ.350ல் ரூ.100 விவசாயிகளுக்கு திருப்பி அளிப்பதற்காக ரூ.1.63 கோடி வரப்பெற்றுள்ளதாக மாவட்ட கலெக்டர் தெரிவித்தார். அவை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என தெரிவித்தார். பாகசாலை மற்றும் சின்னமண்டலி கிராமங்களில் குடிமராமத்துப் பணிக்காக ரூ.9,60,000 நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அப்பகுதி விவசாயிகள் சேர்ந்து ஒரு பாசன சங்கம் அமைத்து பதிவு செய்தபின் பணிகள் துவங்கப்படும். தேசிய வேளாண் காப்பீட்டுத்திட்டத்தின் கீழ் பிரீமியம் செலுத்திய 10700 விவசாயிகளுக்கான இழப்பீட்டுத் தொகை ரூ.18.152 கோடி பெறப்பட்டுள்ளது. காப்பீடு செய்த அனைத்து விவசாயிகளுக்கும் அந்தந்த தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். இவ்வாறு மாவட்ட கலெக்டர்; கூறினார்.

சான்றிதழ்

திருவள்ளுர் தோட்டக்கலை துணை இயக்குநர் நகர்ப்புற மக்களுக்காகவும், விவசாயிகளுக்காகவும் வீட்டு மாடியில் மணல் இல்லாமல் பாலிதீன் பைகளில் குறைந்த தண்ணீர் கொண்டு காய்கறி தோட்டம் அமைப்பது குறித்து விளக்கினார். அதற்கு ஒரு தளையின் விலை ரூ.523ல் அரசு மானியம் ரூ.200 போக ரூ.323 செலுத்தி வீட்டு குடியிருப்பு சான்றினை கொடுத்து பெற்றுக் கொள்ளலாம் என்று கூறினார். தேங்காய் நார் கழிவு, விதைகள், அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா போன்ற உயிர்; உரங்கள் மற்றும் கையேடு; வழங்கப்படும் என தெரிவித்தார். திரூர்குப்பம் வேளாண் அறிவியல் நிலைய பேராசிரியர் அதன் பயன்கள் குறித்து விளக்கினார். பூவிருந்தவல்லி வேளாண் உதவி இயக்குநர் வறட்சி நிலவும் தருணத்தில் நிலம், மணல் இல்லாமல், குறைந்த தண்ணீர் கொண்டு கால்நடைகளுக்கு எளியமுறையில் பிளாஸ்டிக் டிரே மூலம் பசுந்தீவனம் தயாரிக்கும் முறை குறித்து விவசாயிகளிடம் விளக்கினார்.

2015-16-ம் ஆண்டில் தேசிய வேளாண் காப்பீட்டுத்திட்டத்தின்கீழ் பிரீமியம் செலுத்திய 10700 விவசாயிகளுக்கான இழப்பீட்டுத் தொகை ரூ.18.152 கோடி பெறப்பட்டு அவற்றில் 30 விவசாயிகளுக்கு ரூ. 7 இலட்சத்து 12 ஆயிரத்து 502 –ஐ இழப்பீட்டுத் தொகைக்கான காசோலைகளையும், நீர்வடிப் பகுதி மேம்பாட்டு முகமை மூலம் 3 நீர்வடிப்பகுதி விவசாயிகளுக்கு மானியத்துடன் கூடிய விசைத்தெளிப்பான் மற்றும் 3 மகளிர் சுய உதவி குழுவிற்கு வாழ்வாதார மேம்பாட்டு சுழல் நிதிக்கான காசோலைகளையும் மாவட்ட கலெக்டர் வழங்கினார்.

நீர் ஆதாரங்களான ஏரி, குளங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை மற்றும் நீர்வரத்துக்கால்வாய் ஆக்கிரமிப்பினை அகற்றவும், வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்கவும், பட்டா மாற்றம் செய்யவும், தடுப்பணை கட்டுதல், ஏரிகளில் குடிமராமத்துப் பணிகள் மேற்கொள்ளுதல், சுடுகாடு ஆக்கிரமிப்பினை அகற்றவும், போன்ற கோரிக்கைகளை விவசாயிகள் முன்வைத்தனர்.கடந்த மாதத்தில் பெறப்பட்ட விவசாயிகளுடைய கோரிக்கை மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. பின்னர் விவசாயிகளிடமிருந்து மனுக்களை 150 –க்கும் மேற்பட்ட கோரிக்கை மனுக்களை மாவட்ட கலெக்டர் பெற்றுக் கொண்டார்.இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கே.முத்து, வேளாண்மை இணை இயக்குநர்(பொ)சுரேஷ் ஜோ குமார் பிரைட்,வருவாய் கோட்டாட்சியர்கள் திவ்யஸ்ரீ (திருவள்ளுர்), அரவிந்தன் (அம்பத்தூர்),அரசு அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து