முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆந்திராவில் 4 கால்களுடன் பிறந்த ஆண் குழந்தை

சனிக்கிழமை, 24 ஜூன் 2017      இந்தியா
Image Unavailable

காக்கிநாடா, ஆந்திரா மாநிலம் காக்கி நாடாவில் 4 கால்களுடன் பிறந்த குழந்தையை பார்ப்பதற்கு மருத்துவமனை முன்பு ஆயிரக்கணக்கானவர்கள் திரண்டனர்.

4 கால்களுடன் ...

ஆந்திரா மாநிலம் காக்கி நாடா மாவட்டத்தில் உள்ள தபஸ்வரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிமாலா. 25 வயதான அவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. உடனடியாக அவரை காக்கி நாடாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

நேற்று முன்தினம் மாலை அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தை 4 கால்களுடன் பிறந்தது கண்டு டாக்டர்கள் ஆச்சரியம் அடைந்தனர்.அந்த குழந்தையின் வயிற்றுப் பகுதியை ஒட்டிய டி 4 கால்களும் உள்ளன.

டாக்டர் பேட்டி

இதுபற்றி அந்த மருத்துவமனையின் குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர் மணிகயம்பா கூறுகையில், “ 10 லட்சம் குழந்தைகளில் ஒரு குழந்தை இப்படி வித்தியாசமான முறையில் பிறக்க வாய்ப்புள்ளது” என்றார். அந்த குழந்தையும் தாயும் நலமாக இருப்பதாக மருத்துவமனை அறிவித்துள்ளது. குழந்தையை மட்டும் தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து கண்காணித்து வருகிறார்கள்.

மக்கள் கூட்டம்

இதற்கிடையே 4 கால்களுடன் பிறந்த குழந்தை பற்றி காக்கிநாடா பகுதியில் பரபரப்பாக தகவல் பரவியது. இதையடுத்து மருத்துவமனை முன்பு ஆயிரக்கணக்கானவர்கள் திரண்டனர். அந்த அதிசய குழந்தையை பார்க்க வேண்டும் என்று கூட்டத்தினர் கூறினார்கள். ஆனால் மருத்துவமனை நிர்வாகம் அதை ஏற்கவில்லை. இதையடுத்து போலீசார் வரவழைக்கப்பட்டு கூட்டத்தினர் கலைக்கப்பட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து