முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உள்நாட்டு பாதுகாப்பு குறித்து மோடி பேசாதது ஏன்? காங்கிரஸ் கேள்வி

ஞாயிற்றுக்கிழமை, 25 ஜூன் 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : உள்நாட்டு பாதுகாப்புக்கு அச்சுறுத்தலும் ஆபத்தும் ஏற்பட்டிருப்பது குறித்து பிரதமர் மோடி தனது வானொலியில் பேசாதது ஏன் என்று காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி மாதந்தோறும் கடைசி ஞாயிறு அன்று மன் கி பாத் (மக்களின் குரல்) என்ற தலைப்பில் வானொலியில் உரையாற்றுகிறார். நேற்று மாதத்தின் கடைசி ஞாயிறாக இருந்ததால் அவர், வானொலியில் உரையாற்றினார். அப்போது கடந்த 1975-ம் ஆண்டு மத்தியில் இந்திரா காந்தி தலைமையில் காங்கிரஸ் அரசு இருந்தது. காங்கிரஸ் அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வந்தனர். இதனால் அமைதி சீர்குலைந்தது. இதனையொட்டி கடந்த 1975-ம் ஆண்டு இதே நாளில் (நேற்று) இந்திரா காந்தி,  அவரச நிலையை பிரகடனம் செய்தார். இதுகுறித்து பிரதமர் நரேந்தர மோடி தனது வானொலி உரையில் நினைவுகூர்ந்தார்.

இதற்கு பதில் கூறும் வகையில் உள்நாட்டு பாதுகாப்புக்கு அச்சுறுத்தலும் ஆபத்தும் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து மோடி தனது மன் கி பாத் உரையில் குறிப்பிடாதது ஏன் என்று காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பிரிவினைவாதிகளும் தீவிரவாதிகளும் தீவிரமாக வன்முறையில் ஈடுபட்டிருப்பதால் நாட்டுக்கு உள்ளேயும் வெளியேயும் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. பிரிவினைவாதிகள் தற்போது முழு தீவிரவாதிகளாக மாறிவிட்டனர். இதற்கு உதவி செய்த ஜம்மு-காஷ்மீர்  முதல்வர்  மெஹ்பூபா முப்தி தலைமையிலான  மக்கள் ஜனநாயக கட்சிக்கு நன்றி என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் டோம் வதக்கன் நேற்று டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் தெரிவித்தார்.

ஆடற்கலையில் சிறந்து விளங்கும் பாரதிய ஜனதா, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஒரு விதமாகவும் நாட்டின் பிற பகுதியில் தேசியவாதம் குறித்து பேசி வருகிறது. பிரதமரின் மான் கி பாத் உரையை கவனிக்கிறோம். பல்வேறு பிரச்சினைகள் குறித்து அவர் பேசி வருகிறார். அதேமாதிரி உள்நாட்டு பாதுகாப்பு குறித்து அவர் பேச நாங்கள் விரும்புகிறோம். சிக்கிம் மாநிலத்தில் நாது லா  கனவாய் வழியாக கைலாஷ் மானசோவருக்கு சென்ற யாத்திரீர்களுக்கு சீனா அனுமதி வழங்க மறுத்துவிட்டது. இதிலிருந்து அண்டை நாடுகளுடன் பாரதிய ஜனதா அரசின் உறவு எப்படி இருக்கிறது என்பதை காட்டுகிறது என்றும் டோம் வதக்கன் மேலும் தனது பேட்டியின் போது கூறியுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து