முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மழை வேண்டி ஆக்கூர் மாரியம்மன் கோவிலில் கூழ்வார்த்தல் திருவிழா: ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்

ஞாயிற்றுக்கிழமை, 25 ஜூன் 2017      திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே ஆக்கூர் கிராமத்தில் ஸ்ரீ மாரியம்மன் மற்றும் கெங்கையம்மனுக்கு கூழ்வார்த்தல் திருவிழா நேற்று நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு மழை வேண்டி கூழ்ஊற்றி வழிபட்டனர்.

கூழ்வார்த்தல் திருவிழா

செய்யாறு அடுத்த ஆக்கூர் (காலனி) கிராமத்தில் கிராம தேவதைகளான ஸ்ரீ மாரியம்மன் மற்றும் கெங்கையம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஆனி மாதத்தில் கூழ்வார்த்தல் விழா வெகுவிமர்சையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி தற்போது ஆனி மாதம் முன்னிட்டு மழை வேண்டியும், மாநிலம் செழிக்கவும், கூழ்வார்த்தல் விழா நடைபெற்றது. இதையட்டி காலையில் கிராம தேவதைகளுக்கு சிறப்பு அபிஷேக தீபாராதனை நடந்தது.

அதனைத் தொடர்ந்து பக்தர்கள் தங்களின் வேண்டுதல்களை நிறைவேற்றும் வகையில் பொங்கலிட்டு அம்மனுக்கு சிறப்பு படையலிட்டனர். பின்னர் 12 மணியளவில் சிலம்பாட்டத்துடன் பூங்கரகங்கள் ஊர்வலமாக எடுத்து வந்தனர். பின்னர் பக்தர்கள் திரளாக வந்து கோவில் வளாகத்தில் கொப்பரையில் கூழ்வார்த்து மழை வேண்டி அம்மனை வழிபட்டனர்.

மதியம் 2 மணியளவில் அம்மன் அருள்வாக்கும் அதைத் தொடர்ந்து அன்னதானம், வாணவேடிக்கை ஆகிய நிகழ்ச்சிகளும் நடந்தன. இரவு 9 மணியளவில் அம்மன் சிறப்பு அலங்கார ரூபத்தில் கிராமத்தில் உள்ள முக்கிய வீதிகள் வழியாக வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இவ்விழாவையட்டி இரவு வாணி நாடக மன்றம் சார்பில் பக்தி நாடகம் நடைபெற்றது.

இதில் ஆக்கூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர் விழாவுக்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து