முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுதந்திரதினவிழா எம்எல்ஏ எதிர்கோட்டை சுப்பிரமணியன் தேசியக் கொடியேற்றி மரியாதை

செவ்வாய்க்கிழமை, 15 ஆகஸ்ட் 2017      விருதுநகர்
Image Unavailable

சாத்தூர், - சுதந்திர தினவிழாவை முன்னிட்டு சாத்தூர் அருகே ஆலங்குளம்அரசு மேல்நிலைப்பள்ளியில் சாத்தூர் எம்எல்ஏ எதிர்கோட்டை சுப்பிரமணியன் தேசியக் கொடியேற்றி மரியாதை செலுத்தினார்.

விருதுநகர் மாவட்டம் முழுவதிலும் இன்று சுதந்திர தினவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. சுதந்திர தினவிழாவை முன்னிட்டு சாத்தூர் அருகே ஆலங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் சாத்தூர் எம்எல்ஏ எதிர்கோட்டை சுப்பிரமணியன் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து என்சிசி மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். அரசு பொதுத்தேர்வில் சாதனை படைத்த மாணவ மாணவிகளுக்கும், பல்வேறு விளையாட்டு போட்டிகளில் சாதனை படைத்த மாணவ, மாணவிகளுக்கும் சாத்தூர் எம்எல்ஏ எதிர்கோட்டை சுப்பிரமணியன் கேடயம், நினைவு பரிசு வழங்கி வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து பள்ளி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.சுதந்திர தினவிழாவை முன்னிட்டு பள்ளி வாளாகத்தில் மரக்கன்றுகளை சாத்தூர் எம்எல்ஏ எதிர்கோட்டை சுப்பிரமணியன் நட்டினார். நிகழ்ச்சியில் எம்எல்ஏ பேசும்போது, தமிழக அரசு கல்வித் துறையில் சரித்திர மாற்றங்களை கொண்டுவந்து மாணவர்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக உள்ளது.மறைந்த முதல்வர் ஜெயலலிதா பள்ளிக் கல்வித்துறைக்கு கோடிக்கணக்கான நிதி ஒதுக்கி விலையில்லா லேப்டாப், சைக்கிள், பஸ்பாஸ், சீருடை, பள்ளி நோட்புக், காலனிகள், கல்வி உதவித் தொகை என திட்டங்களை செயல்படுத்தி மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தார். சாத்தூர் தொகுதியில் என்னுடைய முயற்சியின் காரணமாக கடந்த ஓர் ஆண்டில் மட்டும் ஏராளமான பள்ளிகளின் தரம் உயர்தப்பட்டுள்ளது. மேலும் ஏராளமான பள்ளிகளின் கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. கடந்த குடியரசு தினவிழாவில் ஆலங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பேவர் பிளாக்கல் அமைக்கப்படும் என்று வாக்குறுதி கொடுத்தேன். அதன்படி 6 மாதத்தில் என்னுடைய வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளேன். தற்போது இந்த பள்ளியில் ரூ.20லட்சம் மதிப்பீட்டில் பேவர்பிளாக்கல் அமைத்துக் கொடுத்துள்ளேன். நான் வாக்குறுதி கொடுத்தால் எப்பாடு பட்டாவது அதை விரைவில் நிறைவேற்றியே தீருவேன் என்று தொகுதி மக்களுக்கு நன்றாக தெரியும். கடந்த ஓர் ஆண்டில் மட்டும் சாத்தூர் தொகுதியில் கோடிக்கணக்கான மதிப்பீட்டில் ஏராளமான வளர்ச்சி திட்டங்களை கொண்டு வந்துள்ளேன். தொகுதி மக்கள் என்றும் அதிமுகவிற்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்று பேசினார். கூட்டத்தில் பள்ளிதலைமை ஆசிரியர் பரமசிவம், மூத்த ஆசிரியர் முத்துராஜ், வெம்பக்கோட்டை முன்னாள் அதிமுக ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன், குறிச்சியார்பட்டி மாரியப்பன், கிளை செயலாளர் தங்கராஜ், உக்கிரபாண்டியன்,கணேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து