முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்தியில் குறைந்தது 50 ஆண்டுகளாவது பா.ஜ.க. ஆட்சி இருக்க வேண்டும்: அமீத்ஷா

சனிக்கிழமை, 19 ஆகஸ்ட் 2017      இந்தியா
Image Unavailable

போபால் :  மத்தியில் பாரதிய ஜனதா குறைந்தது 50 ஆண்டுகளாவது ஆட்சியில் இருக்கும்படி கட்சியை பலப்படுத்த வேண்டும் என்று கட்சியின் அகில இந்திய தலைவர் அமீத்ஷா கூறியுள்ளார்.

பாரதிய ஜனதாவை பலப்படுத்த கட்சியின் தலைவர் அமீத்ஷா நாடு முழுவதும் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார். தற்போது மத்தியப்பிரதேச மாநிலத்தில் அவர் சுற்றுப்பயணம் செய்து கட்சி நிர்வாகிகளையும்,தொண்டர்களையும் சந்தித்து கட்சியை வளர்ப்பதற்கான கருத்தை கேட்டு வருகிறார்.

இந்த நிலையில் கட்சியின் சார்பாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், மத்தியில்  5 முதல் 10 ஆண்டுகள் மட்டும் ஆட்சியில் இருப்பது பாரதிய ஜனதாவின் நோக்கம் அல்ல. குறைந்தது 50 ஆண்டுகளாவது   பாரதிய ஜனதா ஆட்சியில் இருக்கும்படி கட்சியை நாடு முழுவதும் உள்ள மூளைமுடுக்குகளிலெல்லாம் பலப்படுத்த வேண்டும் என்று அமீத்ஷா கூறியுள்ளார்.

தற்போது மத்தியில் பெரும்பான்மை பலத்துடன் பாரதிய ஜனதா ஆட்சி செய்து வருகிறது. மாநிலங்களில் ஆயிரத்து 387 கட்சி எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். கட்சி நீண்ட காலத்திற்கு ஆட்சியில் இருக்க வேண்டும் என்று தொண்டர்கள் விரும்புகிறார்கள். மத்தியில் பாரதிய ஜனதா கூட்டணி அரசுக்கு 330 லோக்சபை எம்.பி.க்கள் உள்ளனர். கட்சியின் வளர்ச்சி தற்போது உச்சக்கட்டத்தில் உள்ளது. மேலும் கட்சியானது நீண்டகாலத்திற்கு ஆட்சியில் இருக்க வேண்டும் என்று தொண்டர்கள் நினைக்கிறார்கள் என்று  நிர்வாகிகள் கூட்டத்தில் அமீத்ஷா தெரிவித்ததாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நாட்டில் பெரிய அளவில் மாற்றம் கொண்டு வரவேண்டும். அதற்காக பாரதிய ஜனதா, மத்தியில் குறைந்தது 40 முதல் 50 ஆண்டுகளாவது ஆட்சியில் இருக்க வேண்டும். பல ஆண்டுகளாக கடினமான உழைப்பு, கட்சியின் தலைவர்கள் அர்ப்பணிப்பு, தியாகம் மூலம் கட்சி வளர்ந்துள்ளது என்றும் அந்த அறிக்கையில் அமீத்ஷா மேலும் கூறினார்.
நாடு முழுவதும் 104 நாட்கள் பயணத்தின் ஒரு பகுதியாக மத்தியப்பிரதேச மாநிலத்திற்கு 3 நாள் பயணமாக அமீத்ஷா நேற்றுமுன்தினம் வந்துள்ளார். தலைநகர் போபாலில் நடைபெற்ற கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். இந்த கூட்டத்தில் கட்சியின் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து