முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாகப்பட்டினம் மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் : கலெக்டர் முனைவர் சீ.சுரேஷ்குமார் வெளியிட்டார்

செவ்வாய்க்கிழமை, 3 அக்டோபர் 2017      நாகப்பட்டினம்
Image Unavailable

 

நாகப்பட்டினம் மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டு கலெக்டர் சீ.சுரேஷ்குமார் தெரிவித்ததாவது "நாகப்பட்டினம் மாவட்டத்தில் மொத்தம் 1502 வாக்கு சாவடிகள் உள்ளன. மொத்த வாக்காளர்கள்; 12,76,268 பேர் உள்ளனர். இதில் 6,30,330 ஆண்களும் 6,45,916 பெண்களும் இதர வகுப்பினர் 22 பேர்களும் உள்ளனர்.

 சிறப்பு முகாம்

  01.01.2018-ஐ தகுதி நாளாக கொண்டு நடைபெற உள்ள சிறப்பு சுருக்கத்திருத்தம் 03.10.2017 முதல் 31.10.2017 வரை படிவங்கள் பெறப்பட உள்ளன. எதிர்வரும் 08.10.2017 மற்றும் 22.10.2017 ஆகிய இரண்டு தினங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன. மேலும், பொதுமக்கள் தங்களின் பெயர்சேர்த்தல்இ நீக்கம்இ திருத்தம் மற்றும் முகவரி மாற்றத்திற்கான உரிய படிவங்களை தொடர்புடைய அலுவலகங்களில் சமர்ப்பித்தோ அல்லது றறற.நடநஉவழைளெ.n.பழஎ.in என்ற இணையதள முகவரியில் ஆன்லைன் முலம் விண்ணப்பித்தோ பயன் பெறுமாறு நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர் முனைவர்சீ.சுரேஷ்குமார், தெரிவித்துள்ளார்.

  இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.கருணாகரன், வருவாய் கோட்டாட்சியர் ம.கண்ணன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) ராமன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மீ.செல்வகுமார், தனி வட்டாட்சியர்(தேர்தல்) அமுதவிஜயரங்கன், மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து