முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மணக்கால் கிராமத்தில் அரசின் சாதனைகளை விளக்கும் புகைப்படக் கண்காட்சி : கலெக்டர் ராசாமணி தொடங்கி வைத்தார்

வெள்ளிக்கிழமை, 6 அக்டோபர் 2017      திருச்சி

 

திருச்சி மாவட்டம், இலால்குடி வட்டம், மணக்கால் கிராமத்தில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் அமைக்கப்பட்ட அரசின் சாதனைகளை விளக்கும் புகைப்படக் கண்காட்சி நடத்தப்பட்டது. இப்புகைப்படக் கண்காட்சியை மாவட்ட கலெக்டர் கு.இராசாமணி. தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

 புகைப்பட கண்காட்சி

 தமிழக அரசின் நலத்திட்டங்கள், சாதiனைகள் மற்றும் புதிய திட்டங்கள் போன்ற பல்வேறு விபரங்கள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வண்ணமாக அனைத்து மாவட்டங்களிலும் புகைப்படக் கண்காட்சி நடத்தப்படுகிறது. அரசின் சாதனைகள், திட்டங்கள் பற்றி பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சிகளின் வாயிலாக தொடர்ந்து வெளிவந்தாலும், இதுபோன்று மக்கள் கூடும் இடங்களில் புகைப்படக் கண்காட்சி அமைக்கும் போதுதான், திட்டங்கள் பொதுமக்களை எளிதாகச் சென்றடையும். இப்புகைப்படக் கண்காட்சியில் முன்னாள் முதலமைச்சர் அவர்களால் செயல்படுத்தப்பட்ட திட்டங்களான டாக்டர்.முத்துலெட்சுமிரெட்டி மகப்பேறு நிதியுதவி 12 ஆயிரத்திலிருந்து 18 ஆயிரமாக உயர்வு, மீனவர்களுக்கு தனி வீட்டுவசதி திட்டம், 50 சதவீத மானியத்தில் பெண்களுக்கு இருசக்கர வாகன திட்டம், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகை இருமடங்காக உயர்வு, பசுமை வீடு, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகள், மிதிவண்டிகள், விலையில்லா அரிசி, திருமண நிதியுதவியுடன் கூடிய தாலிக்குத் 8 கிராம் தங்கம் மற்றும் நிதியுதவி வழங்குதல், மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் தொடங்கி வைக்கப்பட்ட பல்வேறு சிறப்புத் திட்டங்கள் பற்றிய புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தது.

 இப்புகைப்பட கண்காட்சியில் இலால்குடி வருவாய் கோட்டாட்சியர் இரா.கோவிந்தராஜீலு, வட்டாட்சியர் சீ.இராகவன் மற்றும் அனைத்து அரசு துறை அலுவலர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து