முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசுத் துறை அலுவலர்களும் தீவிர டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடவேண்டும்: அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உத்தரவு

புதன்கிழமை, 11 அக்டோபர் 2017      கரூர்
Image Unavailable

கரூர் கலெக்டர் அலுவலகத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் , மாவட்ட ஆட்சித்தலைவர் கு,கோவிந்தராஜ், தலைமையில் தீவிர டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள அனைத்து அரசுத் துறை அலுவலர்க்கான ஆய்வுக் கூட்டம் நடத்தினார்.

அமைச்சர் உத்தரவு

இவ்வாய்வு கூட்டத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர் தெரிவித்ததாவது:

தமிழ்நாடு முதலமைச்சர் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை தீவிர படுத்துவதற்காக ஒவ்வொரு வியாழக்கிழமையும் டெங்கு தடுப்பு தினம் அனுசரித்து விழிப்புணர்வு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட உத்தரவிட்டதையொட்டி பல்வேறு தடுப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளை கொசு ஒழிப்பு பணிகளுக்கு தேவையான களப்பணியாளர்களை வைத்து தீவிரமாக பணி மேற்கொள்ள வேண்டும். கள பணியாளர்கள் பொதுமக்களின் வசிப்பிடங்களுக்கு சென்று டெங்கு காய்ச்சல் ஏற்படுத்தும் ஏடிஸ் கொசுக்கள், வீடு மற்றும் வீட்டிற்கு அருகிலுள்ள சரியாக மூடாத நீர் சேமிக்கும் தொட்டிகள், டிரம்கள், குடங்கள், பாத்திரங்கள், டயர்கள், தேங்காய் ஓடுகள், உடைந்த குடங்கள் போன்றவற்றில் தேங்கும் நல்ல தண்ணீரில் உருவாகும் என்பதால் அனைத்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், பள்ளிகள், கல்லுhரிகள், விடுதிகள், தொழில் நிலையங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், புதிய கட்டுமான இடங்கள், காலிமனைகள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், திரையரங்குகள் மற்றும் பொதுமக்கள் கூடும் அனைத்து பொது இடங்களிலும் உள்ள நல்ல தண்ணீர் தேங்கும் இடங்களையும், பொருட்களையும் கண்டறிந்து, தீவிர கொசு ஒழிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். மக்கள் உபயோகத்திற்காக வைத்திருக்கும் தண்ணீரை சேமிக்கும் கலன்களை கொசுக்கள் புகுந்து முட்டையிடாத வண்ணம் முழுமையாக மூடி வைக்க அறிவுருத்த வேண்டும்.

மேலும், கேபிள் டிவி, திரையரங்கு, குறும்படம், செய்தி மக்கள் தொடர்பு துறை விளம்பர வாகனம் , துண்டு பிரசுரம் போன்றவைகளின் வாயிலாக பொதுமக்களுக்கு டெங்கு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும். தொண்டு நிறுவனங்கள், வியபார சங்கங்கள், கட்டுமான பணியில் ஈடுபடும் சங்கங்கள், சுய உதவிக்குழுக்கள், வறுமை ஒழிப்பு சங்கங்கள், இளைஞர் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஆகியோர் சமூக அக்கறையோடு பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். குடிநீர் வடிகால் வாரியம் மூலம் விநியோகம் செய்யும் குடிநீர் குளோரினேசன் செய்து வழங்க வேண்டும்

டெங்கு தீவிர தடுப்பு

பொதுபணித்துறைக்கு சொந்தமான கட்டிடங்கள், அலுவலகங்கள், கல்வி நிலையங்கள், விடுதிகள், அனைத்து கட்டிடங்களிலும் அலுவலர்கள், ஆசிரியர்கள், கல்லுhரி முதல்வர்கள், விடுதி காப்பாளர்கள் அனைவரும் டெங்கு தீவிர தடுப்பு பணியில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள முன்வர வேண்டும். சுகாதாரத் துறை அலுவலர்கள் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் கட்டில் வசதிகள், மருந்துகள், நோய் கண்டுபிடிக்கும் கருவிகள், தேவையான இரத்தம் மற்றும் தட்டணுக்கள் இருப்பு வைத்துக் கொள்ள வேண்டும். நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் நிலவேம்பு குடிநீரை அரசு மருத்துவமனைகள் , பள்ளிகள், கல்லுhரிகள், இரயில் நிலையங்கள், அரசு அலுவலகங்கள் போன்ற மக்கள் அதிகம் கூடுமிடங்களில் அனைவருக்கும் தொடர்ந்து வழங்க வேண்டும். அதற்கான நிலவேம்பு கசாய பவுடர்களை தேவையான அளவு இருப்பில் வைத்துக் கொள்ள வேண்டும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அறிவுறுத்தினார்.

இவ்வாய்வுக் கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் எஸ்.கவிதா, மருத்துவக் கல்லுhரி மருத்துவனை முதல்வர் மரு.ரேவதி, மருத்துவப் பணிகள் இணை இயக்குநர் மரு.விஜயகுமார், சுகாதாரதுறை இணை இயக்குநர் மரு.நளினி, கரூர் நகராட்சி ஆணையர் அசோக் குமார், ஊராட்சிகளின் உதவி இயக்குநர் ராஜ்மோகன் உள்ளிட்ட அனைத்து அரசுத் துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து