முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நுழைவுத்தேர்வை எதிர்கொள்ள 5 இடங்களில் பயிற்சி மையங்கள் அமைப்பு மாணவர்கள் ஆன்லைன் மூலம் பெயர்களை பதிவு செய்யலாம்

செவ்வாய்க்கிழமை, 24 அக்டோபர் 2017      நீலகிரி

நீலகிரி மாவட்டத்தில் நுழைவுத் தேர்வை எதிர்கொள்ள 5 இடங்களில் பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் மாணவ, மாணவியர்கள் ஆன்லைன் மூலம் தங்களது பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம். இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் ஜெ.இன்னசென்ட் திவ்யா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு_

ஒன்றிய அளவில் 5 மையங்கள்

தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர் சட்டபேரவையில் அறிவித்ததன் தொடர்ச்சியாக தமிழக மாணவ, மாணவியர்களை அனைத்து வகையான போட்டித் தேர்வுகள் மூலம் நுழைவுத் தேர்வுகளை எதிர்கொள்வதற்கு ஏதுவாக நீலகிரி மாவட்டத்தில் ஒன்றிய அளவில் நஞ்சநாடு, கீழ்கோத்தகிரி, கூடலூர், அதிகரட்டி ஆகிய இடங்களில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் கோத்தகிரியில் உள்ள மாவட்ட ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் ஆகிய ஐந்து பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த ஐந்து பயிற்சி மையங்களில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகளில் 2017_2018 ஆம் கல்வியாண்டில் 12 ஆம் வகுப்பு பயிலும் விருப்பமுள்ள மாணவ, மாணவியர்களின் பெயர்களை பெயர்களை என்ற சிடூஙூஷகீச்ச்ங்ஙூ.கிச்சு.டுடூ இணையதளம் (ஞடூங்டுடூடீ) மூலம் அந்தந்த பள்ளிகளிலேயே தலைமை ஆசிரியர்கள் மஐஈஎண்ணை பயன்படுத்தி  23.10.2017 முதல் 26.10.2017 வரை பதிவு செய்து கொள்ளலாம் எனவும், மாணவ, மாணவியர் தங்கள் பெயர்களை பதிவு செய்த பிறகு ஒப்புகைச் சீட்டை சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்களிடம் பெற்றுக்கொள்ள தெரிவிக்கப்படுகிறது. இந்த பயிற்சி மையங்கள் நடைபெறும் நேரம் மற்றும் நாள் பின்னர் அறிவிக்கப்படும். எனவே மேற்கண்ட விவரங்களின் அடிப்படையில் விருப்பம் உள்ள மாணவ, மாணவிகளின் பெயர்களை குறிப்பிட்ட காலத்திற்குள் தெரிவித்துள்ள இணையதளம் மூலம் அந்தந்த பள்ளிகளிலேயே பதிவுகள் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு மாவட்ட கலெக்டர் ஜெ.இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து