முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

478 ஏக்கர் நிலங்கள் பாசனவசதி பெற்றிடும் வகையில் திருமங்கலம் வடகரை கால்வாய் தூர்வாரும் பணிகள்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார்:

புதன்கிழமை, 25 அக்டோபர் 2017      மதுரை
Image Unavailable

திருமங்கலம்.-மதுரை மாவட்டம் திருமங்கலம் வட்டத்தில் 478 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்றிடும் வகையில் திருமங்கலம்-வடகரை கால்வாயை தூர்வாரி சீரமைத்திடும் பணிகளை தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் வட்டத்தில் அமைந்துள்ள வடகரை பெரிய கண்மாய் பொதுப்பணித்துறையின் மூலம் பராமரிக்கப்பட்டு வருகிறது.இந்த கண்மாய்க்கு தெற்காறு ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள வடகரை அணைக்கட்டில் இருந்து தண்ணீர் வடகரை கால்வாய் மூலம் சென்றடைகிறது.இந்த கால்வாயின் நீளம் 1450மீட்டரும்,6மீட்டர் முதல் 10மீட்டர் அகலமாகவும் உள்ளது.சமீப காலமாக திருமங்கலம் நகராட்சி பகுதிகளின் விரிவாக்கத்தால் திருமங்கலம் நகரின் உட்பகுதியிலிருந்து வெளியேறும் கழிவுகள் மற்றும் குப்பைகள் வடகரை அணைக்கட்டு மற்றும் கால்வாயில் தேங்கி வடகரை கண்மாய்க்கு சென்று விடுகிறது.கழிவு நீர் கால்வாயில் கலப்பதால் ஆகாயத்தாமரை போன்ற தாவரங்கள் வளர்ந்து கால்வாயில் தண்ணீர் செல்வது தடைபட்டு மழைக்காலங்களில் மழைநீர் இழப்பு ஏற்படுகிறது.மேலும் வடகரை அணைக்கட்டு மற்றும் வடகரை கால்வாய்களில் கழிவு நீர் தேங்கி டெங்கு பரவிடும் அபாயமும்,சுகாதார சீர்கேடும் ஏற்பட வாய்ப்புகளும் அதிகம் காணப்பட்டது.தொடர்ந்து கழிவு நீர் வடகடை கண்மாய்க்கு செல்வதால் வடகரை கண்மாய் மாசடைந்து வருகிறது.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு திருமங்கலம் குண்டாறு வடகரை கால்வாயை தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நேரில் பார்வையிட்டு கழிவு நீர் தேங்கி சுகாதார சீர்கேட்டை உருவாக்கிடும் வடகரை கால்வாயை போர்க்கால அடிப்படையில் தூர்வாரி சீரமைத்திடுமாறு பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.அதன் அடிப்படையில் திருமங்கலம் வட்டத்திலுள்ள வடகரை கால்வாயை தூர்வாரி சீரமைத்திடும் பணிகளுக்கான துவக்கவிழா பூமிபூஜையுடன் நேற்று வெகுசிறப்பாக நடைபெற்றது.இவ்விழாவிற்கு மதுரை மாவட்ட கலெக்டர் கொ.வீரராகவராவ் தலைமை வகித்தார்.மாநில வருவாய் மற்றும் நிர்வாக ஆணையர் சத்யகோபால் முன்னிலை வகித்தார்.ஏராளமானோர் கலந்து கொண்ட இவ்விழாவில் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பங்கேற்று திருமங்கலம் வடகரை கால்வாயை தூர்வாரி சீரமைத்திடும் பணிகளை தொடங்கி வைத்தார்.
பின்னர் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களிடம் பேசியதாவது: தமிழக முதல்வர் எடப்பாடியாரின் மேலான ஆணைக்கிணங்க திருமங்கலம் வட்டத்தில் 478ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்றிடும் வகையிலும்,டெங்குவை கட்டுப்படுத்திடும் வகையிலும் வடகரை கால்வாயை தூர்வாரி சீரமைத்திடும் பணிகள் போர்க்கால அடிப்படையில் உடனடியாக தொடங்கி நடைபெற்று வருகிறது.வடகரை கால்வாயில் கொசுக்கள் உற்பத்தியாவதை ஒழித்து டெங்கு தடுப்பு நடவடிக்கைகளின் ஒருபகுதியாக வடகரை கால்வாய் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது.அதே போல் டெங்குவை தீவிரமாக கட்டுப்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் வீடுவீடாகச் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.டெங்கு தடுப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்காதவர்களுக்கு முதலில் எச்சரிக்கையும்,அதற்கு கட்டுப்படாதவர்களுக்க சட்டத்திற்கு உட்பட்டு அபராதம் விதிக்கும் நடைமுறையும் கையாளப்படுகிறது.எப்படியாவது கொசுக்களை ஒழிக்கவேண்டும்,டெங்குவை முற்றிலுமாக தடுக்க வேண்டும் என்ற அடிப்படையில் மக்களின் உயிர்களை 100சதவீதம் பாதுகாத்திடும் வகையில் மாண்புமிகு அம்மா அவர்களின் அரசு தமிழக முதல்வர் எடப்பாடியார் வழிகாட்டுதலில் சிறப்புடன் செயல்பட்டு வருகிறது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.இந்த பணிகள் மேற்கொள்வதன் மூலம் வடகரை கால்வாய் சுத்தம் செய்யப்பட்டு கால்வாயில் கழிவு நீர் தேங்குவது நிறுத்தப்பட்டு வடகரை கால்வாயினை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு எந்தவித சுகாதார சீர்கேடும் ஏற்படாமல் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். மேலும் வடகரை கால்வாயில் கழிவு நீர்கலப்பது நிறுத்தப்பட்டு.இந்த கண்மாயின் மூலம் 478ஏக்கர் நிலங்கள் பாசனவசதி பெற்றிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்விழாவில் மதுரை மாவட்ட கூடுதல் கலெக்டர் அம்ரித்,உசிலம்பட்டி கோட்டாட்சியர் சுகன்யா,திருமங்கலம் தாசில்தார் நாகரத்தினம்,மதுரை புறநகர் மாவட்ட கழக துணைச் செயலாளர் அய்யப்பன்,முன்னாள் மாவட்ட செயலாளர் ஜெயராமன்,மாநில சிறுபான்மை பிரிவு செயலாளர் ஜான்மகேந்திரன்,மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் தமிழ்ச்செல்வம்,இலக்கிய அணிச் செயலாளர் திருப்பதி,திருமங்கலம் நகரச் செயலாளர் ஜே.டி.விஜயன்,முன்னாள் திருமங்கலம் யூனியன் சேர்மன் தமிழழகன்,திருமங்கலம் ஒன்றிய செயலாளர் வக்கீல்.அன்பழகன்,மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர் ஆண்டிச்சாமி,கள்ளிக்குடி ஒன்றிய செயலாளர் மகாலிங்கம்,கல்லுப்பட்டி ஒன்றிய செயலாளர் ராமசாமி,பேரூர் கழகச் செயலாளர்கள் நெடுமாறன்,பாலசுப்பிரமணியன்,திருமங்கலம் அவைத்தலைவர் ஜஹாங்கீர்,முன்னாள் நகர் மன்ற துணைத் தலைவர் சதீஸ்சண்முகம்,திருமங்கலம் ஒன்றியதுணைச் செயலாளர் சுகுமார்,திருமங்கலம் நகராட்சி ஆணையாளர் சரஸ்வதி,பொறியாளர் சக்திவேல்,சுகாதார அலுவலர் ராஜ்மோகன்,கட்சி நிர்வாகிகள் பிரபுசங்கர்,உச்சப்பட்டி செல்வம்,சிவன்காளை,கட்டாரிவேல் முருகன்,கலைச்செல்வன்,சுரேஷ் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து