முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருச்சி மாநகராட்சி கொட்டப்பட்டு கிராமத்தில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் கட்டப்படும் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

வியாழக்கிழமை, 26 அக்டோபர் 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை : திருச்சி மாநகராட்சி கொட்டப்பட்டு கிராமத்தில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார், திருச்சியில் நடைபெற்ற எம்.ஜிஆர் நூற்றாண்டு விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசினார், அப்போது அவர் வெளியிட்ட அறிவிப்புகள் வருமாறு: -

1. திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்கு புதிய ஒருங்கிணைந்த பேருந்து நிலையம்

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி கொட்டப்பட்டு கிராமத்தில்ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்க கலந்தாலோசகர் மூலம் விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. இத்திட்டஅறிக்கையினை தற்போது தொழில் நுட்ப மற்றும் நிதி மதிப்பீடு கூர்ந்தாய்வு செய்துஉரிய வணிக முறையை (முடிவுசெய்து செயல்படுத்தப்படும்.திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் நெடுஞ்சாலைத் துறை மூலம்கட்டப்படவிருக்கும் பாலங்கள் திருச்சி-சிதம்பரம் சாலையிலிருந்து பிரிந்து செல்லும் கல்லக்குடி -தாப்பாய் சாலையிலுள்ள காட்டாற்றின் குறுக்கே ஒரு பாலம்கட்டப்படும்.
ஏரகுடி-மகாதேவி சாலையில் ஒரு பாலம் கட்டப்படும்.துலுக்கம்பட்டி சாலையில் ஒரு பாலம் கட்டப்படும்.தண்டலை-திருத்தலையூர் சாலையில் ஒரு பாலம் கட்டப்படும்.சமயபுரம் - கீழக்கண்ணுகுளம் (வழி) மண்ணச்சநல்லூர் -திருப்பஞ்சிலி சாலையில் ஒரு பாலம் கட்டப்படும்.துவரங்குறிச்சி-அடைக்கம்பட்டி சாலையில் ஒரு பாலம் கட்டப்படும்.இலுப்பூர்-வளநாடு சாலையில் ஒரு பாலம்புடலாத்தி-மாராடி-கோட்டப்பாளையம் சாலையில் ஒருபாலம்கட்டப்படும்.கொப்பம்பட்டி - விஸ்வாம்பாள் சமுத்திரம் சாலையில் ஒருபாலம் கட்டப்படும்.பைத்தம்பாறை-சேருகுடி சாலையில் ஒரு பாலம் கட்டப்படும்.வாளவந்தி-துலையாநத்தம் (வழி) மங்களம் சாலையில் ஒரு

பாலம்கட்டப்படும்.

சென்னை-திருச்சிராப்பள்ளி வழித்தடத்தில் காட்டூர் மற்றும் இலால்குடிரயில் நிலையங்களுக்கிடையே தற்போதுள்ள ரயில்வே கடவு எண்.226க்குமாற்றாக சாலை மேம்பாலம் கட்டப்படும்.திருச்சி கீழ்கல்கண்டார்கோட்டை சாலையில், மஞ்சத்திடல்-திருவெறும்பூர் ரயில் நிலையங்களுக்கிடையே உள்ள கடவு எண்.323க்கு மாற்றாகசாலை மேம்பாலம் கட்டப்படும்.காவேரி சாலையிலுள்ள இரயில்வே கடவு எண்.249க்கு பதிலாக ஸ்ரீரங்கம்மற்றும் திருச்சி டவுன் ரயில் நிலையங்களுக்கிடையே சாலை மேம்பாலம்கட்டப்படும்.துறையூர் நகரத்திற்கு இரண்டாம் கட்ட புறவழிச்சாலை அமைக்கப்படும்.

நான்கு வழிச்சாலை

திருச்சி முதல் நாமக்கல் வரை 77 கிலோ மீட்டர் நீளமுள்ள (மாநிலநெடுஞ்சாலை எண்.25) சாலையினை தேசிய நெடுஞ்சாலையாக தரம் உயர்த்தகொள்கை அளவில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைஅமைச்சகத்தால் 12.5.2017ல் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இச்சாலையினை நான்குவழிச்சாலையாக மேம்படுத்த தயாரிக்கப்பட்ட விரிவான திட்ட அறிக்கையின் மீதுதேசிய நெடுஞ்சாலை அலகு மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.மணப்பாறை தொகுதி, கோவில்பட்டியில் உள்ள பழமை வாய்ந்த பயணியர்விடுதி பழுது நீக்கி புதுப்பிக்கப்படும்.

கி.ஆ.பெ.விஸ்வநாதம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும்லால்குடி, முசிறி, மணப்பாறை, ஸ்ரீரங்கம் மற்றும் துறையூர்மருத்துவமனைகளில் மாரடைப்பு நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்துமுதலுதவி அளிக்க ஏதுவாக மாரடைப்பு சிகிச்சை பிரிவுகள் ஏற்படுத்தப்படும் கி.ஆ.பெ.விஸ்வநாதம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்மருந்து எதிர் வீரிய காச நோய் வார்டு ஏற்படுத்தப்படும்.திருச்சிராப்பள்ளி நகரில் ஒரு புதிய மருந்து கிடங்கு அமைக்கப்படும்.மணப்பாறை அரசு மருத்துவமனையில் சி.டி.ஸ்கேன், ஆய்வக கருவிகள்,டயாலிசிஸ் கருவி, எண்டோஸ்கோப் கருவி, புற்றுநோயாளி கீமோதெரபிபோன்ற வசதிகள் ஏற்படுத்தப்படும்.மணப்பாறை வட்டத்தில் ஒருங்கிணைந்த ஆரம்ப சுகாதார சேவை திட்டம்செயல்படுத்தப்படும்.இனாம்குளத்தூர் வட்டத்தில் கண் சிகிச்சை பிரிவு அமைக்கப்படும் நாவல்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதிய பல் மருத்துவப் பிரிவுஏற்படுத்தப்படும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து