முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாளையங்கோட்டை வட்டம் முன்னீர்பள்ளம் பகுதியில் கலெக்டர் சந்தீப் நந்தூரி ஆய்வு

ஞாயிற்றுக்கிழமை, 29 அக்டோபர் 2017      திருநெல்வேலி

திருநெல்வேலி பாளையங்கோட்டை வட்டம் முன்னீர்பள்ளம் சமுதாயநலக் கூடத்தில் வைத்து டெங்கு கொசு ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி கலெக்டர்              சந்தீப் நந்தூரி   முன்னிலையில்  இன்று (29.10.2017)    முன்னீர்பள்ளம் பகுதியில் டெங்கு கொசு நோயால் பாதிக்கப்பட்டு சுமார் 10 நாட்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்த நபர்கள் மூலம் அப்பகுதியில் உள்ள பொதுமக்களிடம் தனக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தும் தனது குடும்பத்தினருக்கு ஏற்பட்ட கஷ்டங்கள் குறித்தும்  அவர்களுக்கு (பாதிக்கப்பட்டவர்கள்) அளித்த ஆதரவுகளையும் வழங்கப்பட்ட சிகிச்சை முறைகளையும் பொதுமக்கள் முன்னிலையில் எடுத்துக்கூறினார். மேலும்  டெங்கு காய்ச்சல் பரவாமல் தங்களை பாதுகாத்து கொள்ளுவது அவசியம்   குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

விழிப்புணர்வு

அதனை தொடர்ந்து  முன்னீர்பளளம் பகுதியில் நடைபெற்று வரும் டெங்கு கொசு ஒழிப்பு துப்புரவு பணிகளை நேரில் சென்று கலெக்டர்  ஆய்வு மேற்கொண்டார்கள். மேலும் அப்பகுதியில் உள்ள பொதுமக்களிடம் டெங்கு நோயால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து வீடு வீடாக சென்று வழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். மற்றும்  முன்னீர்பள்ளம் பகுதியில் மெகா துப்புரவு பணிகள், அபேட் மருந்து தெளித்தல், கொசு மருந்து அடித்தல் நிலவேம்பு குடிநீர் வழங்குதல், அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளை வைத்து டெங்கு கொசு ஒழிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்துதல் மற்றும் ஆரம்ப சுகாதார மருத்துவர்கள் மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் முன்னீர்பள்ளம் பகுதியில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. டெங்கு உள்ளிட்ட வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்ட்டவர்கள் வீடுகளுக்கு அப்பகுதியில் உள்ள சுகாதாரத்துறையினருடன் அலுவலர்கள் வீடு வீடாக சென்று ஆய்வு செய்து டெங்கு கொசு ஒழிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும்  கலெக்டர்ஆய்வு செய்த போது டெங்கு கொசுபுழு கண்டறியப்பட்ட வீடுகளின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கையும் சுகாதாரமற்ற முறையில் உள்ள வீடுகளின் உரிமையாளர்கள்  மீது அபராதமும் விதிக்க உத்தரவிட்டார்.  அப்பகுதியில் உள்ள நீண்ட நாட்கள் திறக்கப்படமால் இருந்த வீடுகள்  கலெக்டர்முன்னிலையில் திறக்கப்பட்டு அங்கு டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

முன்னீர்பள்ளத்தில் உள்ள சில வீடுகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்களை வீட்டில் உள்ளே அனுமதிக்காததை கண்டறிந்த கலெக்டர் உடனடியாக அந்த வீட்டிற்கு சென்று சோதனையிட்டதில் டெங்கு கொசு புழு கண்டறியப்பட்டது. மேலும் கண்டறியப்பட்ட டெங்கு கொசு புழு அப்பகுதியில் உள்ள பொதுமக்களிடம் காண்பிக்கப்பட்டது. மேலும் டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்கள் வீட்டை சோதனை செய்ய வரும் பொழுது  வீட்டில் உள்ளே அனுமதிக்காத உரிமையாளர்கள் மீது அபராதமும் காவல்துறை மூலம் நடவடிக்கை மேற்கொள்ள  உத்தரவிட்டார். முன்னீர்பள்ளம் பகுதியில்  மெத்தனமாக டெங்கு கொசு ஒழிப்பு பணிகளை செயல்படுத்திய அதிகாரிகள் மீது துறைரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ள ஆணையிட்டர்.

ஆய்வின்போது  மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பழனி, மகளிர் திட்ட இயக்குநர் ஹெட்ஸி லீமா அமலினி,  பாளையங்கோட்டை வட்டாட்சியர் தங்கராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள்  சண்முகத்தாய், ஆறுமுககனி, முன்னீர்பள்ளம் ஆரம்ப சுகாதார மருத்துவர் கந்தசாமி, வட்டார சுகாதார அலுவலர் முத்துசாமி, சுகாதார ஆய்வாளர் சிதம்பரம் உட்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து