முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெரம்பலூர் அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளின் அறிவியல் விழிப்புணர்வு களப்பயணம் முதன்மை கல்வி அலுவலர் துவக்கி வைத்தார்

வெள்ளிக்கிழமை, 8 டிசம்பர் 2017      பெரம்பலூர்
Image Unavailable

 

அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் மூலம் புதிய அணுகுமுறை கல்வித் திட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர், பெண்குழந்தைகள், சிறுபான்மையினர் மற்றும் நகர்புற நலிவடைந்த சிறுவர்களுக்கான அறிவியல் கல்வி விழிப்புணர்வு சுற்றுலா பயணத்தை முதன்மை கல்வி அலுவலர் அருள்மொழிதேவி நேற்று (08.12.2017) கொடியசைத்து துவக்கி வைத்தார்.

 அறிவியல் சுற்றுலா

 இச்சுற்றுலா பயணத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, அரசு உயர்நிலைப் பள்ளி, அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வரும் மாணவர்களிடையே பள்ளி அளவில் பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, எழுத்துப் பயிற்சி, போட்டிகள் நடத்தி அதில் முதலிடம் பெற்ற 200 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு இக்கல்விச் சுற்றுலாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

 மேலும், மாணவர்களின் பாதுகாப்பிற்காக 20 ஆசிரியர்களும் உடன் சென்றுள்ளனர். இக்கல்விச் சுற்றுலாவில் மாணவ, மாணவிகளுக்கு அறிவியல் விழிப்புணர்வு ஏற்படும் வகையில் திருச்சி அண்ணா கோளரங்கத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இந்நிகழ்ச்சியில், மாவட்ட கல்வி அலுவலர் பிருதிவிராஜன், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் ரோஸ் நிர்மலா, உதவி தொடக்கக் கல்வி அலுவலர் இராமதாஸ், கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் செந்தாமரைச்செல்வி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் குணசேகரன், பாரதிதாசன், வட்டார வள மைய மேற்பார்வையாளர் இரவீந்திரன் மற்றும் வட்டார ஒருங்கிணைப்பாளர் செந்தாமரைச்செல்வி மற்றும் பெரம்பலூர் வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து