முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தருமபுரி மாவட்டத்தில் டெங்கு முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது: கலெக்டர் கே.விவேகானந்தன், தகவல்

செவ்வாய்க்கிழமை, 19 டிசம்பர் 2017      தர்மபுரி
Image Unavailable

தருமபுரி பாரதிபுரம் மற்றும் அதியமான்கோட்டை தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணிமனைகள், அரசினர் விருந்தினர் மாளிகை, நெடுஞ்சாலைத்துறை சுற்றுலா மாளிகை ஆகிய இடங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகளை கலெக்டர் கே.விவேகானந்தன், நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வுசெய்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது:-

 துரித நடவடிக்கை

தருமபுரி மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகத்தால் எடுக்கப்பட்ட துரித நடவடிக்கைகளால் தருமபுரி மாவட்டத்தில் டெங்கு முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. கலெக்டர் உட்பட அனைத்து நிலை மாவட்ட அலுவலர்கள், மருத்துவ அலுவலர்கள், துப்புரவு பணியாளர்கள், தூய்மை காவலர்கள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணியாளர்கள், உறுப்பினர்கள், கிராம வறுமை சங்க உறுப்பினர்கள் உட்பட தோராயமாக 3000 நபர்களுக்கு மேலாக டெங்கு ஒழிப்பு பணியில் தினமும் ஈடுபட்டு வருகின்றனர். டெங்கு உற்பத்தியாகும் பகுதிகளை முதலில் கண்டறியப்பட்டு கொசு புழுக்கள் ஒழிக்கும் நடவடிக்கையில் கொசு மருந்து அடித்தல், தூய்மை பணிகள் மேற்கொள்ளுதல், வீடு வீடாக சென்று கொசு புழுக்களை அழித்தல் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர்களைக் கொண்டு பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதுதவிர மருத்துவத்துறை அலுவலர்களை கொண்டு காலமுறை ஆய்வும், அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கி கண்காணிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு வியாழக்கிழமை நாட்களிலும் அரசு அலுவலகங்களில் தூய்மை தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.

 டெங்கு ஒழிப்பு பணி

தருமபுரி நகராட்சி மற்றும் பாலக்கோடு, காரிமங்கலம், மாரண்டஹள்ளி, பாப்பாரப்பட்டி, பென்னாகரம், அரூர், கடத்தூர், பொ.மல்லாபுரம், பாப்பிரெட்டிபட்டி, கம்பைநல்லூர் ஆகிய 10 பேரூராட்சிகளிலும், 251 கிராம ஊராட்சிகளிலும் டெங்கு ஒழிப்பு பணிகளும், கொசு மருந்து அடிக்கும் பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. வாரம்தோறும் திங்கட்கிழமை திருக்கோயில்கள், கிறுத்துவ தேவாலயங்கள், மசூதிகள், புத்த மற்றும் சமணம் உள்ளிட்ட அனைத்து வழிபாட்டு தலங்கள். செவ்வாய்கிழமை அரசு போக்குவரத்து பணிமனைகள், அனைத்து காவல் நிலையங்கள், இரயில் நிலையம், கொள்முதல் நிலையங்கள், தனியார் ஆட்டோ மொபைல் நிலையங்கள் மற்றும் லாரி செட்கள். புதன்கிழமை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள்.வியாழக்கிழமை அனைத்து அரசு அலுவலகங்கள், வட்டாட்சியர் அலுவலகங்கள், அனைத்து நீதிமன்றங்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகங்கள், அனைத்து வருவாய் அலுவலகங்கள், கிராம நிர்வாக அலுவலகங்கள். வெள்ளிகிழமை அரசு மற்றும் தனியார் தொழிற்சாலைகள். சனிக்கிழமை அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள், அங்கன்வாடி சத்துணவு மையங்கள். ஆகிய இடங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது என கலெக்டர் கே.விவேகானந்தன், தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து