முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராஞ்சி மத்திய சிறையில் லல்லு அடைக்கப்பட்டார்

ஞாயிற்றுக்கிழமை, 24 டிசம்பர் 2017      இந்தியா
Image Unavailable

ராஞ்சி: கால்நடை தீவன ஊழல் விவகாரத்தின் 2-வது வழக்கில் ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் குற்றவாளி என்று சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து அவர் ராஞ்சி சிறையில் அடைக்கப்பட்டார். அதேநேரம் அவருக்கான தண்டனை விவரம் வரும் ஜனவரி 3-ம் தேதி அறிவிக்கப்பட உள்ளது. லல்லு மீது மேலும் 3 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்த ஊழல் விவகாரம் தொடர்பாக மொத்தம் 64 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில் ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவர் லல்லு பிரசாத் மீது மட்டும் 5 வழக்குகள் தொடரப்பட்டன.

இதில் சாய்பாஸா மாவட்டக் கருவூலத்தில் இருந்து ரூ.37.7 கோடி மோசடி செய்த வழக்கு ராஞ்சியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் லல்லு பிரசாத் குற்றவாளி என்று கடந்த 2013 அக்டோபரில் தீர்ப்பளிக்கப்பட்டது. அப்போது அவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. பிகார் முன்னாள் முதல்வர் ஜெகன்னாத் மிஸ்ராவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த தீர்ப்பைத் தொடர்ந்து லாலு பிரசாத்தின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டது. அவர் சிறையில் அடைக்கப்பட்டார். 87 நாட்கள் சிறைவாசத்துக்குப் பிறகு உச்ச நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது.இந்த வழக்கில்  ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம், கால்நடைத் தீவன ஊழலில் லல்லு மீதான 4 வழக்குகளை தள்ளுபடி செய்தது.

மேலும் கால்நடைத் தீவன வழக்குகள் தொடர்பான விசாரணையை 9 மாதங்களுக்குள் முடிக்குமாறு சிபிஐ-க்கு உத்தரவிட்டது. இதில் தியோகர் கருவூலத்தில் இருந்து கடந்த 1991 முதல் 1994-ம் ஆண்டு வரை ரூ.89 லட்சம் மோசடி செய்த வழக்கில் சிபிஐ நீதிமன்ற நீதிபதி சிவபால் சிங் நேற்று தீர்ப்பு வழங்கினார்.

அதில் ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் உட்பட 16 பேர் குற்றவாளிகள் என்று நீதிபதி தீர்ப்பளித்தார். முன்னாள் முதல்வர் ஜெகன்னாத் மிஸ்ரா உட்பட 6 பேர் விடுதலை செய்யப்பட்டனர். இந்த தீர்ப்பைத் தொடர்ந்து ராஞ்சியில் உள்ள பிர்ஸா முண்டா மத்திய சிறையில் லாலு பிரசாத் அடைக்கப்பட்டார்.
 ஜனவரி 3-ம் தேதி லல்லு உள்ளிட்ட குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் அறிவிக்கப்படும் என்று நீதிபதி சிவபால் சிங் தெரிவித்துள்ளார்.

பிகார் துணை முதல்வர் சுஷில் குமார் மோடி கூறியபோது, “மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோதுதான் கால்நடைத் தீவன வழக்கில் லல்லு பிரசாத் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். தற்போது 2-வது வழக்கிலும் அவர் குற்றவாளியாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கு பாஜகவின் மீது புகார் கூறுவது எந்த வகையில் நியாயம்” என்று கேள்வி எழுப்பியுள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவர் மணீஷ் திவாரி கூறும்போது, மத்திய அரசின் கூண்டுக்கிளியாக சிபிஐ செயல்படுகிறது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து