முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்பேஸ் த்ரில்லர் படத்தில் நடிப்பதாகக் கூறியவுடன் யாரும் நம்பவில்லை: ஜெயம் ரவி

சனிக்கிழமை, 6 ஜனவரி 2018      சினிமா
Image Unavailable

Source: provided


முதலில் நான் ஸ்பேஸ் த்ரில்லர் படத்தில் நடிக்கிறேன் என்ற சொன்னவுடன் யாருக்கும் நம்பிக்கையில்லை. என் மகன் ஆரவ் இப்படத்தில் அறிமுகமாகி யிருக்கிறார் என்று ஜெயம் ஜெயம் பேசினார். இந்தியாவின் முதல் ஸ்பேஸ் த்ரில்லர் படமாக உருவாகியிருக்கும் 'டிக்:டிக்:டிக்' படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

'டிக்:டிக்:டிக்' படத்தின் இயக்குநர் சக்தி சக்தி சௌந்தர்ராஜன், ஜெயம் ரவி, நிவேதா பெத்துராஜ், ஜெயபிரகாஷ், இசையமைப்பாளர் இமான் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டனர்.

இவ்விழாவில் ஜெயம் ரவி பேசுகையில், ''முதலில் நான் ஸ்பேஸ் த்ரில்லர் படத்தில் நடிக்கிறேன் என்ற சொன்னவுடன் யாருக்கும் நம்பிக்கையில்லை. அதிலும் 'மிருதன்' இயக்குநரின் இயக்கத்தில் நடிக்கிறேன் என்று சொன்ன பிறகும் யாரும் நம்பவில்லை.

இருபது வருடத்திற்கு முன் தண்ணீரை விற்கப் போகிறேன் என்று சொல்லியிருந்தால் யாரும் நம்பியிருக்கமாட்டார்கள்.பிறகு நல்ல படம் எடுத்தால் நாங்கள் பார்ப்போம் என்று ரசிகர்கள் வைக்கும் நம்பிக்கையினால்தான் இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன். இந்தப் படத்தின் அரங்கத்தை முதலில் காட்டிய பிறகு தான் இப்படத்தின் மீது நம்பிக்கை அதிகரிக்க வைத்தது. அரங்கத்தின் அமைப்பே நான் உள்பட அனைத்து நடிகர்களின் பங்களிப்பை எளிதாக்கியது.

ஏனெனில் ஸ்பேஸ் த்ரில்லர் என்று சொன்னவுடன் நடிகர்களுக்கு நடிப்பதில் தயக்கம் இருக்கும். குழப்பம் இருக்கும். கேள்வி இருக்கும். ஆனால் இந்தப் படத்திற்காக போடப்பட்ட அரங்கத்தில் உண்மையான விண்வெளி ஆய்வகத்திற்கான உள்ளரங்க அமைப்பு டீட்டெயிலாக இடம்பெற்றிருந்தது. இதற்காக கலை இயக்குநரை மனதாகப் பாராட்டலாம்.

இப்படத்தின் மூலம் என்னுடைய மகன் ஆரவ் அறிமுகமாகியிருக்கிறார். அவரிடம் ஒரு முக்கிய கேரக்டர் இருக்கிறது அதில் நடிக்கிறாயா? என இயக்குநர் கேட்டதைச் சொன்னேன். 'ம் நடிக்கலாம்' என்றார். அதற்கு டான்ஸ் தெரியவேண்டும் என்றேன். 'கத்துக்கலாம்' என்றார். அவருடைய இந்த ஆட்டிடியுட் படக்குழுவினரை கவர்ந்தது.

அதனால் என் மகன் ஆரவ்வை அறிமுகப்படுத்தியிருக்கிறேன். அவருக்கு உங்களின் ஆதரவை தேவை'' என்றார் ஜெயம் ரவி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து