நடிகர் சல்மானுக்கு ராஜஸ்தான் தாதா கொலை மிரட்டல்

ஞாயிற்றுக்கிழமை, 7 ஜனவரி 2018      சினிமா
salman khan new(N)

Source: provided

ஜெய்ப்பூர் : பிரபல இந்தி நடிகர் சல்மான்கானுக்கு ராஜஸ்தான் தாதா பகிரங்கமாக கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவன் பிரபல தாதா லாாரன்ஸ் பிஷ்னோய். இவன் மீது கொலை, கடத்தல் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.

ஜோத்பூரை சேர்ந்த தொழிலதிபரை மிரட்டிய வழக்கில் லாரன்சை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அப்போது நிருபர்களிடம் கூறிய அவன்,  என்னை பொய்யான வழக்கில் போலீசார் கைது செய்துள்ளனர். என்னால் நடிகர் சல்மான்கானை மட்டும் கொல்ல முடியும்.


ஜோத்பூரில் அவர் கொல்லப்படுவார். அதன் பின்னர் எங்களுடைய உண்மையான அடையாளம் என்னவென்று அவருக்கு தெரியும். இவ்வாறு அவர் கூறினார். மான்களை வேட்டையாடி கொன்ற வழக்கில் சல்மான்கான் கடந்த வியாழக் கிழமைதான் ஜோத்பூர் கோர்ட்டில் ஆஜரானார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து