முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லியில் ஜனாதிபதி, பிரதமருடன் தமிழக கவர்னர் இன்று சந்திப்பு

திங்கட்கிழமை, 8 ஜனவரி 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி,  டெல்லியில், பிரதமர் மோடி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்தை இன்று சந்திக்கிறார் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித். தமிழக சட்டசபையில் நேற்று ஆளுநர் உரை நிகழ்த்திய நிலையில் இன்று  ஜனாதிபதி, பிரதமருடன் சந்திக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

 தமிழகத்தில் கவர்னர் பன்வாரிலால் புரோஹித் நடத்தும் ஆய்வுகளுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில் சந்திப்பு நிகழ உள்ளதால், இதுகுறித்தும் ஆலோசிக்கப்படும் என தெரிகிறது.  தமிழகத்தில் நடத்தப்படும் ஆய்வுகள் குறித்தும், தமிழக அரசு நிலை குறித்தும், கவர்னர், டெல்லியில் ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் எடுத்துரைக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து