முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பணிக்கு திரும்பாவிட்டால் புதிய ஆட்களை நியமிப்போம் - அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் எச்சரிக்கை

திங்கட்கிழமை, 8 ஜனவரி 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : தொழிற்சங்கங்களுடன் இனி பேச்சுவார்த்தை இல்லை என்றும் பணிக்கு திரும்பாவிட்டால் புதிய ஆட்களை நியமிப்போம் என்றும் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
ஊதிய உயர்வு கோரி தமிழகம் முழுவதும் பேருந்து ஓட்டுநர்கள் 5-வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம், மறியலும் நடத்தப்படுகிறது. இதனால் பேருந்துகள் போதிய அளவு இயங்கவில்லை. இதனால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
கவுரவம் பார்க்கவில்லை
போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நிதித் துறை செயலாளர் சண்முகம் மற்றும் போக்குவரத்து அதிகாரிகளுடன் தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்தினார். அதன்பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறுகையில், ஊதிய உயர்வு தொடர்பாக தொழிற்சங்கங்களுடன் 23 முறை பேச்சுவார்த்தை நடத்திவிட்டோம். பேச்சுவார்த்தை நடத்துவதில் அரசு கவுரவம் பார்க்கவில்லை. தொழிற்சங்க நிர்வாகிகள்தான் கவுரவம் பார்க்கிறார்கள்.
15 ஆண்டுகால பிரச்னை
தொழிலாளர்களை தொழிற்சங்கங்கள் தவறாக வழி நடத்துகிறது. தொழிலாளர்களின் ரூ.5000 கோடியை திரும்ப தர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 15 ஆண்டுகால பிரச்சினைக்கு ஒரே நாளில் தீர்வு காண நிர்பந்திக்கிறார்கள். மக்கள் பாதிக்கக் கூடாது என்பதற்காகவே வெளியாட்களை வைத்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஏற்கெனவே ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில் மீண்டும் ஒரு புதிய ஒப்பந்தம் போட முடியாது. தற்காலிக ஓட்டுநர்களிடம் உரிய ஓட்டுநர் உரிமம் உள்ளது. 6 ஆண்டுகளுக்கு பதில் 3 ஆண்டில் இவர்களது சம்பளம் 2.57 சதவீதம் அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது.
புதிய ஆட்கள் நியமனம் ...
2.44 சதவீதத்துக்கும், 2.57 சதவீதத்துக்கும் என்ன பெரிய வித்தியாசம் வந்துவிட போகிறது. பொங்கலுக்குள் அவர்களுக்கு சேர வேண்டிய நிலுவைத் தொகையை தர முயற்சிக்கிறோம். எனவே பணிக்கு திரும்புவார்கள் என நம்புகிறேன். அவ்வாறு திரும்பாவிட்டால் புதிய ஆட்களை நியமனம் செய்வோம் என்று அமைச்சர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து