காஷ்மீரில் நடந்த என்கவுன்ட்டரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

செவ்வாய்க்கிழமை, 9 ஜனவரி 2018      இந்தியா
Jammu Kashmir 2017 09 02

ஸ்ரீநகர், தெற்கு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்ட்டரில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

இதுகுறித்து காவல் அதிகாரி ஒருவர் கூறுகையில்,

அனந்த்நாக் மாவட்டத்தின் லார்னூ பகுதியில் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதலில் 2 தீவிரவாதிகள் இதுவரை கொல்லப்பட்டுள்ளனர். அத்துடன் தாக்குதல் நடைபெற்ற இடத்தைத் தற்போது பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்துள்ளனர். அங்கு மறைந்துள்ள தீவிரவாதிகளைப் பிடிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கொல்லப்பட்ட தீவிரவாதிகள் குறித்த விவரங்கள் இன்னும் கண்டறியப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து