முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கிய முதல்வர் - துணை முதல்வருக்கு நன்றி பாண்டியன் சூப்பர்மார்க்கெட் நிர்வாகக் குழுவில் தீர்மானம்

வியாழக்கிழமை, 11 ஜனவரி 2018      மதுரை
Image Unavailable

மதுரை, -மறைந்த முதல்வர் ஜெயலலிதா அறிவித்த சிறப்பு திட்டமான பொங்கல் பரிசு தொகுப்பினை 1.84 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கி பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாட வழிவகை செய்த தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம், கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ ஆகியோருக்கு மதுரை மாவட்ட பாண்டியன் சூப்பர் மார்க்கெட் நிர்வாகக்குழு கூட்டத்தில் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மதுரை மாவட்ட பாண்டியன் நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையின் நிர்வாக்குழு கூட்டம் அதன் தலைவர் வில்லாபுரம் ஜெ.ராஜா தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு இணைப்பதிவாளர் மற்றும் மேலாண்மை இயக்குனர் வி.எம்.சந்திரசேகரன் முன்னிலை வகித்தார். பொது மேலாளர் பி.குழந்தைவேல் தீர்மானங்களை வாசித்தார்.
இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அருள்ஆசியில் நடைபெற்று வரும் அ.தி.மு.க. ஆட்சியில் ஜெயலலிதா அறிவித்த சிறப்பு திட்டமான பொங்கல் பரிசு தொகுப்பினை 1.84 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கி தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட வழிவகை செய்த முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி, துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம், கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ ஆகியோருக்கு கோடான கோடி நன்றியினையும், பாராட்டினையும் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழர்களின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டை நிரந்தரமாக நடத்த வழிவகை செய்து இந்தாண்டு மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு விழாவை திட்டமிட்டபடி நடத்த உத்தரவிட்ட தமிழக முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோருக்கு மதுரை மாவட்ட மக்களின் சார்பில் கோடான கோடி நன்றிகளையும், பாராட்டுதல்களையும் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மதுரை மக்களுக்கு சிறப்பான திட்டங்களை அ.தி.மு.க.அரசு வழங்கி வருகிறது. உயர்மட்ட மேம்பாலம், புதிய பஸ்நிலையம் உள்ளிட்ட சிறப்பு வளர்ச்சி திட்டங்களை தந்த அ.தி.மு.க.அரசு. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வழியில் நின்று மதுரை மாநகரை சர்வதேச நகரமாக உருவாக்கும் வகையில் ரூ. 2 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் நவீன பஸ்நிலையம் அமைக்க திட்டமிடபட்டுள்ளதற்கு தமிழக முதலமைச்சருக்கு நன்றியினையும், பாராட்டுதலையும் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் வி.கே.எஸ்.மாரிச்சாமி, பார்த்திபன், போஸ், தேனம்மாள், எம்.எஸ்.கே.மல்லன், ஜெயக்கொடி, ஆண்டிச்சாமி, பாண்டியம்மாள், ஆரோக்கியசாமி உள்ளிட்ட நிர்வாகக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முடிவில் துணைத்தலைவர் எஸ்.முருகன் நன்றி தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து