முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொதுக்கூட்டங்களில் பேச கமல்ஹாசன் திட்டம்

செவ்வாய்க்கிழமை, 16 ஜனவரி 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை :  நடிகர் கமல்ஹாசனின் அரசியல் பிரவேசம் செய்ய உள்ளார். இதனையடுத்து  நாளை அவர் தனது சுற்றுப் பயண விவரத்தை அறிவிக்க உள்ளார்.

ரஜினிகாந்த் தனது அரசியல் பிரவேச அறிவிப்புக்கு பிறகு, திமுக தலைவர் கருணாநிதி, ஆர்.எம்.வீரப்பன் போன்ற தலைவர்களை சந்தித்து ஆசி பெற்றார். ரஜினிகாந்த் மக்கள் மன்றம் என்ற பெயரில் வெப்சைட்டில் கட்சிக்கு ஆள் சேர்க்கும் பணி நடக்கிறது. செல்போன் ஆப் மூலமாகவும் இதில் ஆள் சேர்ப்பு நடைபெறு கிறது. இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை திடீரென கமல் ஒரு அறிவிப்பு வெளியிட்டார்.

அதாவது ஜனவரி 26ம் தேதி முதல் தமிழகம் முழுக்க சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளதாக அவர் அறிவித்தார். அதுகுறித்த விவரங்களை ஜனவரி 18ம் தேதி வெளியிட உள்ளதாக தெரிவித்தார். எனவே நாளைஅவர் என்ன மாதிரி பயண திட்டங்களை அறிவிக்க உள்ளார் என்று அறிவதற்காக மக்களிடம் ஆர்வம் ஏற்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து