முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பழனி முருகன் கோவிலில் தை ப்பூசத் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது

புதன்கிழமை, 24 ஜனவரி 2018      திண்டுக்கல்
Image Unavailable

திண்டுக்கல், - பழனி முருகன் கோவிலில் தை ப்பூசத் திருவிழா இன்று (25ம் தேதி) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
அறுபடை வீடுகளில் 3ம் படைவீடான பழனி முருகன் கோவிலில் நடைபெறும் திருவிழாக்களிலேயே தை ப்பூசத் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. இத்திருவிழாவின் முக்கிய அம்சமே பக்தர்கள் பாதயாத்திரையாக நடந்து வந்து முருகப்பெருமானை தரிசனம் செய்வது தான். 10 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் உலகின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகை தருவது வழக்கம். இவ்வாண்டிற்கான திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இன்று காலை 7 மணிக்கு பழனி முருகன் கோவிலின் உபகோவிலான பெரியநாயகி அம்மன் கோவிலில் விநாயகர் பூஜை, புண்ணியாக வாஜனம், மயூரயாகம் நடைபெற்று கொடிப்படம் நான்குரத வீதிகளில் வலம் வருதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதன்பின் முத்துக்குமாரசாமி, வள்ளி, தெய்வானைக்கு 16 வகை அபிஷேகமும், சிறப்பு அலங்காரமும் நடைபற்று கொடி படத்திற்கு சிறப்பு பூஜையும் நடைபெறுகிறது. காலை 9 மணிக்கு மேல் காலசந்தி பூஜையில் காப்பு கட்டம் நடைபெறுகிறது. அதன்பின்னர் முத்துக்குமாரசாமி, வள்ளி, தெய்வானையுடன் சப்பரத்தில் எழுந்தருளி கொடிப்படத்துடன் கொடிக்கட்டு மண்டபத்திற்கு கொடியேற்ற நிகழ்ச்சிக்காக சுவாமி கொடிக்கட்டு மண்டபத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. காலை 10 மணிக்கு மேல் 11 மணிக்குள் மீன லக்கினத்தில் கொடியேற்றம் நடைபெறுகிறது. பின்னர் பகல் 12 மணிக்கு உச்சிகால பூஜையில் திருஆவினன்குடி கோவில், மலைக்கோவில், விநாயகர், மூலவர், சண்முகர், உற்சவர், துவாரபாலகர்களுக்கு காப்பு கட்டப்படும்.
6ம் நாள் திருவிழாவாக வரும் 30ம் தேதி செவ்வாய்க்கிழமை இரவு 7.45 மணிக்கு மேல் 8.30 மணிக்குள் முத்துக்குமாரசாமி, வள்ளி, தெய்வானை திருக்கல்யாணமும், இரவு 9.30 மணிக்கு மேல் வெள்ளி ரதத்தில் மணக்கோலத்தில் சுவாமி நான்கு ரதவீதிகளில் உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
31ம் தேதி புதன்கிழமை தை ப்பூசத் தேரோட்டம் ஆகும். அன்று காலை 10 மணிக்கு மேல் 11 மணிக்குள் முத்துக்குமாரசாமி, வள்ளி தெய்வானையுடன் திருத்தேரில் எழுந்தருளலும், உடன் திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. அன்றைய தினம் சந்சந்திரகிரஹணம் என்பதால் வழக்கமாக மாலையில் நடைபெறும் தை ப்பூசத் தேரோட்டம் போல் இல்லாமல் காலை 11 மணிக்கு மேல் நடைபெறுகிறது. அன்று பகல் 12 மணிக்கு உச்சிகால பூஜையும், மதியம் 2.45 மணிக்கு சாயரட்சை பூஜையும் நடைபெறும். இரவு 9 மணிக்கு மேல் சம்ரோக்சண பூஜை நடைபெற்று இரவு 9.15 மணிக்கு மேல் ராக்கால பூஜை நடைபெற்று உடன் சன்னதி திருக்காப்பிடப்படும். ழமை தெப்பத்தேர் உற்சவத்துடன் தை ப்பூசத் திருவிழா நிறைவு பெறுகிறது.
தை ப்பூசத்தை முன்னிட்டு இம்மாதம் 30ம் தேதி முதல் பிப்ரவரி 2ம் தேதி வரை 4 நாட்களுக்கு தங்கரத புறப்பாடு நடைபெறாது என்றும் 5ம் திருநாளான 29ம் தேதி திருக்கோயில் சார்பில் தங்கரத புறப்பாடு நடைபெறும் என்றும் கோவில் இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் மேனகா ஆகியோர் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து